இரத்தினபுரி வைத்தியசாலைக்கு இரவு கடமைக்காகச் சென்று கொண்டிருந்த தாதியொருவரின் தொடைகளைத் தடவியதாகக் கூறப்படும் நபரொருவர் உட்பட மூவரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைத்து அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்தும்படி இரத்தினபுரி மாஜிஸ்ரேட் நீதிமன்ற நீதவான் ஜே.டி.எல்.குமார நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இரத்தினபுரி சமன்பிளேஸ் பட்டுகெதர ஆகிய இடங்களைச் சேர்ந்த மூவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களாவர். எகலியகொட பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதான தாதியொருவர் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் செய்து கொண்ட முறைப்பாட்டை அடுத்து இந்த இளைஞர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2 ஆம் திகதி இரவு 7.10 மணியளவில் இரத்தினபுரி வைத்தியசாலை சந்தியிலிருந்து வைத்தியசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இடைநடுவில் மூன்று இளைஞர்கள் நின்று கொண்டிருந்ததாகவும் அதில் ஒரு இளைஞன் தனது தொடையைத் தடவி நசுக்கியதாக தாதி இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யதுள்ளார்.
சம்பவத்தை பொருட்படுத்தாமல் பயணத்தை தொடர்ந்த போது தனக்கு பின்னால் அவர்கள் ஆட்டோவில் தொடர்ந்து வந்ததாகவும் ஆட்டோவில் தனது தொடையை தடவி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆட்டோ தனக்கு அருகே திரும்பிச் சென்ற போது அதில் இலக்கத்தை குறித்துக் கொண்டதாகவும் அத்தாதி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:
கருத்துரையிடுக