புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தான் பெற்ற மகள் காதலனுடன் ஓடிச் சென்று பதிவுத் திருமணம் செய்ததை அறிந்த தாய் உடலில் எண்ணையூற்றி தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று வடமராட்சியில்
இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவமானது யாழ். வடமராட்சிப் பிரதேசத்தின் வல்வெட்டித்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

21 வயதுடைய தனது ஒரே மகள் 19 வயதுடைய காதலனுடன் ஒடிச் சென்றதைத் தாங்க முடியாது தாய் தன்னைத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குறித்த பெண்ணின் தந்தை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் இறந்துள்ளார்.

அவ்வாறிருக்கையில் மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கையில் மகள் தனது 19 வயது காதலனுடன் ஒடிச் சென்றுள்ளார்.

தீ மூட்டி உயிரிழந்த தாயின் சடலம் மந்திகை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top