புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மனைவியை பற்றி தவறாக பேசியதால் உறவினர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தேன் என்று ரிக்ஷாக்காரர் கொலையில் பிடிபட்டவர்
வாக்குமூலம் அளித்துள்ளார். திருத்தணி பெரியார் நகர் 2வது தெருவில் வசித்தவர் தன்ராஜ் (50). ரிக்ஷா ஓட்டிவந்தார்.

இவருடன் மகன் செல்வம் (20). வசித்தார். நேற்று பிற்பகல் வீட்டில் தன்ராஜ் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

பிறகு சடலத்தை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன்ராஜ் வீட்டில் கடந்த 10 நாளாக தங்கியிருந்த அவரது உறவினர் ரவி என்ற ரவிச்சந்திரன்தான் கொலை செய்தார் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், திருத்தணி பகுதியில் பதுங்கியிருந்த ரவிச்சந்திரனை (43) நேற்று இரவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். ரவிச்சந்திரன் கூறியதாவது: சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசித்து வருகிறேன். நானும் தன்ராஜும் உறவினர்கள்.

கடந்த 10 நாளாக தன்ராஜ் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்றுவந்தேன். 6 வருடத்துக்கு முன் என் மனைவி மாயமானார். இதனால் வேதனையில் இருந்தேன். ஒருநாள் போதையில் வந்த தன்ராஜ், என் மனைவி பற்றி அசிங்கமாக பேசினார்.

ஏன் அப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டபோது என்னை அடிக்க வந்து தகராறு செய்தார். இதனால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று இரவு தூங்கிக்கொண்டு இருந்த தன்ராஜ் தலையில் கல்லைப் போட்டு கொன்றுவிட்டு ஓடிவிட்டேன். இவ்வாறு ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top