புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குடும்ப தகராறு காரணமாக தான் பெற்ற குழந்தையை வாஷிங்மிஷனில் போட்டு கொன்று தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டில்லி பகுதியில் மண்டவாலி பகுதியை சேர்ந்தவர் தேவேந்திர யாதவ். இவரது மனைவி சரிதா(30 ).

இவர் தனது வீட்டிற்குள் தாழிட்டு கதவு அதிகம் திறக்கவில்லை. கணவன் வீடு திரும்பியபோது கதவை பல முறை தட்டியும் திறக்கப்படாததால் போலீஸ் உதவியுடன் கதவை உடைத்து சென்றனர். இங்கு அவர் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் கிடந்தார்.

வாளி தண்ணீரில் மகன் கொலை:

அருகில் இருந்த வாஷிங் மிஷனில் 6 வயது பெண்குழந்தையும் வாளியில் உள்ள தண்ணீரில் 11 மாத ஆண் குழந்தையும் இறந்த நிலையில் கிடந்தன. இவரது அறையில் தற்கொலை கடிதம் எதுவும் இல்லை.குழந்தைகளைக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இது குறித்து போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது , இரவு நேரத்தில் அதிக சப்தத்துடன் வாக்குவாதம் நடந்ததாக தெரிவித்தனர். சம்பவம் நடந்தது ஒரு அப்பார்ட்மென்டில் முதல் மாடியாகும். கணவன் , மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த பெண் இந்த கொடூர முடிவை எடுத்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வாஷிங்மிஷனில் மகளை போட்டு கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top