புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

எல்பிட்டிய, குருந்துகஹாதலா என்ற இடத்திலுள்ள வீடொன்றுக்குள் இரவு 8.00 மணியளவில் அத்துமீறிப் புகுந்த நால்வர் துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி அந்த வீட்டிலுள்ள தாயையும் மகளையும் பாலியல்
துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட தாய் 65 வயதானவர் எனவும் மகள் 21 வயதானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் கருவா உரித்துக் கொண்டிருந்த போது இரவு 8.00 மணியளவில் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த நால்வர் வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தி கட்டிப் போட்டுவிட்டு தாயையும் மகளையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான தாயும் மகளும் எல்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top