கட்டுநாயக்கா பிரதேசத்தில் வீட்டு அறையில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயதான இம்மாணவி நேற்று முன்தினம் (05) மாலை தற்கொலை செய்து கொண்டதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் உறவினர்கள் இல்லாதவேளை மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பாடசாலைக்கு செல்லுமாறு தந்தை அறிவுறுத்தியமையின் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸர் மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக