சீனாவில் கழிவுநீர் குழாய்க்குள் பிறந்த சிசுவை போட்டு கொல்ல முயன்ற இளம்வயது பெண்ணை பற்றி கடந்த மாதம் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கிழக்கு ஸ்பெயினில் உள்ள அலிகாண்டே பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் கழிவு நீர் குழாயில் இருந்து பூனை கத்துவதைப் போன்ற சத்தம் கேட்பதாக பொதுமக்கள் மீட்பு துறையினருக்கு புகார் அளித்தனர்.
விரைந்து வந்த மீட்புப் படையினர் பூனையை உயிருடன் மீட்கும் முயற்சியில் பைப்பை வெட்டியபோது அதிர்ச்சியால் திகைத்துப் போயினர். பைப்பினுள், தொப்புள் கொடி அகற்றப்படாத நிலையில் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது.
2.1 கிலோ எடையுள்ள அந்த குழந்தையின் உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது. ஒரு கையின் மணிகட்டில் எலும்பு முறிவும் ஏற்பட்டிருந்தது.
மீட்புப் படையினர் குழந்தையை அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து முதலுதவி அளித்ததில் அபாய கட்டத்தை கடந்து இயல்பு நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 26 வயது பெண்ணை குழந்தையை கொல்ல முயன்ற குற்றத்துக்காக போலீசார் கைது செய்துள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக