வெள்ளத்தில் சிக்கிய விஜேந்தர் சிங் நெகி என்பவர், 9 மணி நேரமாக கேதார்நாத் மணியை பிடித்தபடி உயிருக்கு போராடியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் பகுதியில் கடந்த 17ம் திகதி திடீரென பேய் மழை பெய்ததும், கேதார்நாத் சிவன் கோவில் அமைந்துள்ள மந்தாகினி நதியில் பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் அங்கு ஹோட்டல் நடத்தி வந்த விஜேந்தர் சிங் நெகி(வயது 36) என்பவர் சிக்கிக் கொண்டார்.
இடிந்து விழுந்த ஹோட்டலில் இருந்து, தண்ணீரில் குதித்த விஜேந்தர் சிங் கோவிலை அடைந்துள்ளார்.
அங்கு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதால், வெளிப்புறத்தில் தொங்க விடப்பட்டிருந்த மணியை பிடித்தவாறு உயிர் தப்பியுள்ளார்.
அப்படியே காலை, 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தொங்கிக் கொண்டிருந்த அவர், ஆற்றில் நூற்றுக்கணக்கான உடல்கள் மிதந்து சென்றதைப் பார்த்துள்ளார்.
தண்ணீரின் வேகத்தில் உடையை இழந்து நிர்வாணமாக இருந்த அவர் மிதந்த உடல்களில் இருந்த ஆடைகளை எடுத்து போர்த்திக் கொண்டுள்ளார்.
கோவில் பகுதியில் மிதந்து ஒதுங்கிய உடல்கள் மீது ஏறி நின்று தொங்கிக் கொண்டிருந்த தன்னை நிலைப்படுத்திக் கொண்ட அவர், அங்கிருந்து தப்பி காட்டுக்குள் உயரமான இடத்தில் போய் நின்று கொண்டார்.
அதன் பின் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஹெலிகாப்டர் மூலம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

0 கருத்து:
கருத்துரையிடுக