வடஅமெரிக்க நாடான மெக்சிகோவின் தென்கிழக்கில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அங்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு மண்ணில் புதையுண்டு கிடந்த ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இது கி.பி.600 முதல் கி.பி.900 ஆண்டுகளுக்குட்பட்ட காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இங்கு சிதிலடைந்துள்ள கட்டிடங்கள் மற்றும் 75 அடி உயர பிரமிடுகள் உள்ளன. அவை மாயன் நாகரீகத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.
அங்கு விளையாட்டுத் திடல், பலிபீடம், வீடுகள், இறந்தவர்களின் நினைவிடங்கள், கடைவீதிகள் போன்றவை இருந்ததற்கான அடையாளங்கள், சேதமடைந்த வண்ணம் பூசப்பட்ட சிலைகள் உள்ளன. இவையும் மாயன் நாகரீத்தை பிரதிபலிக்கிறது.
எனவே, இது மாயன் நகரம் என தொல்பொருள் நிபுணர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். கி.மு. 2600-ம் ஆண்டில் மத்திய அமெரிக்காவில் மாயன் நாகரீகம் தோன்றியது. மாயன்கள் கணிதம், வானியல் சாஸ்திரம் போன்றவற்றில் சிறந்து விளங்கினர்.
காலப்போக்கில் அவர்களின் நாகரீகம் மெதுவாக அழிந்தது. மாயன் இன காலண்டர் சமீபத்தில் முடிவடைந்தது. இதனால் உலகம் அழியபோகிறது என செய்தி உருவாகி பீதியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
எனவே, இங்கு தொடர்ந்து அகழ்வு ஆராய்ச்சி பணி நடந்து வருகிறது. அதன் மூலம் மாயன் நாகரீகம் குறித்து புதிய தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்து:
கருத்துரையிடுக