பாடசாலை முடித்து வீடு செல்லும் வழியில் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய அதே பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களை வாரியபொல கல்கந்தயிலுள்ள சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கும்படி ரம்படகல
நீதிமன்ற நீதிவான் டி. எம். டி. பி. பண்டார உத்தரவிட்டார்.
தெல்கந்த உடகந்த பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதுடன் ஒரு மாணவனின் உதவியுடன் மற்ற மாணவன் மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளதாக ரிதிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவியின் பெற்றோர் பிரிந்து வாழ்வதாகவும் தாய் மறுமணம் செய்து கொண்டதால் இம் மாணவி தனது பாட்டியுடன் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவி குருநாகல் சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தியபோது வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இம் மாணவியை பாட்டியிடம் ஒப்படைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார்.

0 கருத்து:
கருத்துரையிடுக