புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொட்டகலை, சென்கிளேயர அருகில் தலவாக்கலை நோக்கி ரயில் பாதை வழியே தனது உறவினர் வீட்டுக்கச் சென்று கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவர் ரயிலில் மோதி
உயிரிழந்துள்ளார்.

பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த கடுகதி ரயிலில் மோதுண்டே இவர் நேற்று மாலை (03) மரணமடைந்துள்ளார்.

மலையகத்தில் தற்போது சீரற்ற காலநிலை நிலவுகின்ற நிலையில் குறித்த வயோதிப பெண் ரயில் பாதை வழியே நடந்து சென்று கொண்டிருந்தவேளை காற்றுடன் பலத்த மழையும் பெய்துள்ளது.

இதன்காரணமாக ரயில் வரும் சத்தம் சரியாக கேட்காமையின் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

மேற்படி இவ்விபத்தில் பத்தனை பிரதேசத்தைச் சேர்ந்த அன்னலட்சுமி எனும் 63 வயதுப் பெண்ணே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் மரணமடைந்த பெண்ணின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top