புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இன்றைய அவசர உலகின் உறவுகள் பெரும்பாலும் ஏனோதானோ என்ற மேலோட்ட நிலையிலேயே வாழ்கின்றன. இதற்கு முக்கிய காரணம் உறவுகள் அங்கங்கே பிரிந்து வாழ்வது தான். வாழ்க்கைக்கான நிலைக்களம் ஒரே இடத்தில் அமையாமல் உறவுகள் தொழிலின் காரணமாகவும் போரின் காரணமாக ஏற்படும் இடப்பெயர்வுகளாலும் திசைக்கொன்றாய் பிரிந்து விடுகிறார்கள்.இந்தப்பிரிவு பல உறவுகள் தமது வேர் எது என்று தெரியாது வாழும் நிலையை உருவாக்கிவிடுகிறது.ஒவ்வொருவரின் இடங்கள் தொலைதூரமாகி விடுகிற காரணத்தினால் உறவுகள் இல்லாமலே வாழப் பழகுகிறார்கள்.அவர்கள் தனியாக வாழவேண்டும் என்று வாழவில்லை,வாழ்க்கை சூழல் அந்த அளவுக்கு அவர்களை மாற்றி விடுகிறது என்பதே நிஜம்.இவ்வாறு தனித்து நிற்கின்ற உறவுகள் அடுத்த சந்ததி யார்? தங்கள் பெற்றோரின் உறவுகள் யார்? என்று தெரியாமலே வளர வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது.இன்றைய உலகில் உறவுகள் பரந்துபட்ட திசையிலே வாழ்வார்கள்.குடும்ப விழாக்கள் என்றால் மட்டுமே உறவுகளை அழைக்கவேண்டியிருக்கிறது.வந்து போகும் தூரமாக இருந்தால் நேரில் வந்து அழைப்பார்கள்.அல்லது தபால்,இணையத்தளம்.தொலைபேசி என்று காலங்கள் மாறிவிட்டன.வருஷம் ஒரு முறையோ,நாலைந்து வருஷங்களுக்கு ஒரு முறையோ கூட இப்படியான அழைப்புக்கள் வரும்,இந்த சூழல் குடும்ப உறவுகளை விரத்தி அடையச்செய்கிறது.அந்த நிலையிலும் அந்த அழைப்புகளுக்குப் போக முடியாத சூழ்நிலை சிலருக்கு அமைந்து விடும்போது உறவுக்குடும்பங்களின் கடைசி ஆணிவேரையும் பிடுங்கிவிடுகிறது.இதனால் தலைமுறைகளிற்கு இடையிலான இடைவெளி நிரந்தரமாகி விடுகிறது.காலப்போக்கில் உறவுகள் யார்யாரோ என்றாகி விடுகிறது. சிலர் இருக்கிறார்கள். உறவுகளை விட்டு தொலைதூரத்தில் இருந்தாலும் தங்கள் பிறந்த ஊர்களில் நடக்கிற கோவில் திருவிழாக்களுக்கு எப்படியாவது போய் விடுவார்கள். ஒருவிதத்தில் இது உறவைப் புதுப்பித்துக்கொள்கிற முயற்சி தான்.இன்னும் சிலர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் வருஷத்தில் பத்து நாளாவது சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள்.பறவைகள் எவ்வளவு உயரத்தில் பறந்து இரை தேடினாலும் தங்கிப்போக தனது கூட்டுக்கு வந்து போகிற மாதிரிதான் இதுவும். இந்த நிலைப்படுத்துதலில் உறவுகள் விட்டுப்போகாமல் தொடரும் வாய்ப்புண்டு.யுத்தத்தால் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் சிலர் மட்டுமே, புலம் பெயர்ந்த நிலையில் உறவுகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பே இல்லாத மாதிரி ஆகி விடுகிறார்கள். இவர்கள் உறவுகளின் எந்த பலமுமின்றி எப்படியோ தாங்களாகவே முயன்று தங்கள் காலில் நிற்கப் பழகி விடுகிறார்கள். இருக்கிற இடத்தைச்சுற்றி முடிந்தவரை ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.இப்படிப் பட்ட நிலையில் உறவு இவர்களுக்கு இரண்டாம் பட்சமாகி விடுகிறது.நண்பர்கள் இடையில் கிடைத்த உறவகள் முதலிடத்தை தட்டிச்செல்கிறது.இப்படிப் பட்டவர்களுக்கும் ஒருவித சிக்கல் இருக்கிறது. உறவுகளை தொலைத்த இவர்களுக்கு அவர்கள் வீட்டுப்பிள்ளைகளின் திருமணம் என்று வரும்போது தங்கள் கௌரவத்தை நிலைநாட்ட உறவுகள் அவசியமாகத் தோன்றுகிறது.அப்போது மனச்சிக்கலிற்கு ஆளாகிறார்கள்.உறவுகளின் எந்தப்பின்னணியும் இல்லாமல் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள், தங்கள் பெருமையை உறவுகளுக்கு பறை சாற்றவாவது தேடிப்போய் தங்கள் இல்ல விழாக்களுக்கு அழைப்பார்கள்.ஒருவர் தனது உறவின் பெருமையை ஊரறிவதைவிட, உறவறிய விரும்புவதன் விளைவே இதற்குக் காரணம்.இந்த சமயத்தில் உறவுகள் பார்க்கும் ஆச்சரியப்பார்வைகள் தான் இவர்களுக்குக் கிடைத்த மகுடம். இப்படி விட்டுப் பிடித்தாலும் பெருமைபெறுவது உறவுகளின் சங்கமத்தில் தான்.அதை இவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.இப்படி தேவைக்கும் பெருமைக்கும் மட்டுமே உறவுகள் வேண்டும் என்பது அத்தனை சரியல்ல. இன்றைய விஞ்ஞான தொழில்நுட்பத்தில் தூரம் ஒரு பொருட்டல்ல. தொலைத் தொடர்பு வசதிகள் சர்வ சாதாரணமாகி விட்ட நிலையில் போன் தொடர்புகள் மூலம் உறவு களை தக்க வைத்துக்கொள்ள முடியும்.அலட்சியமாக,பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையுமே உறவுகளை கிடப்பில் போட்டு விடுகின்றன. நட்பை நேசியுங்கள்,உறவுகளை மதியுங்கள்."சொந்த சகோதரனிலும் அதிகமாய் சிநேகிப்பவருமுண்டு " அதே நேரம் நீங்கள் வேர்களாகவும் கிளைகளாகவும் வெளிப்பட்ட உறவுகளை தொலைத்து விடாதீர்கள். தொலைத்து விட்டால் அங்க அடையாளங்கள் இல்லாமல் போய்விடும்.அங்க அடையாளங்கள் மூலம் உங்களை நீங்கள் அடையாளம் காட்டுவது உலகப்பிரகாரமான அடையாளம்.உறவுகள் வழியாக நீங்கள் வெளிப்படுவது தான் மிகச்சரியான அடையாளம்.உறவுகள் இல்லாவிட்டால் எங்கிருந்து நான் வந்தேன்?என்று என்னையே நாங்கள் கேள்விகேட்கும் நிலைவந்துவிடும். என்வே,நாம் எங்கிருக்கிறோம் என்பது முக்கியமில்லை.எமது உறவுகளுடன் இருக்கிறோமா என்பது தான் முக்கியம்.
கட்டுரையை அனுப்பியவர் -S -மனுவேந்தன் 

4 கருத்து:

  1. தற்காலத்திற்கு மிகவும் அவசியமான ஆக்கம்,ம்ம்ம் நன்றாகவுள்ளது

    பதிலளிநீக்கு
  2. நாம் இப்போ 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம் ,காலத்திற்கு ஏற்ப நாம் மாறத்தான் வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. இன்றைய நவீன வாழ்க்கையானது எம் உறவுகளை திக்குதிசையில் வாழ வழி வகுத்திருக்கிறது.பணமே வாழ்க்கையின் மூலதனமாக உள்ள கால கட்டத்தில் நாம் அதற்கேற்றால் போல் அதனை தேடி
    உலகமெங்கும் பறந்து வாழ்கின்றோம் .காகம் இல்லாத நாடு சொல்லலாம் நம் உறவுகள் இல்லாத நாட்டை சொல்ல முடியுமா? புரியாத மொழி ,பழகாத இனம் உள்ள நாட்டிலே வாழும் எம்முறவுகள் படும் இன்பதுன்பங்கள் பற்றி ஆராயுமிடத்து

    அன்றைய காலத்தில் எம்முறவுகள் நாட்டில் ஏற்பட்ட பொருட்களின் விலை அதிகரிப்பும்,தாம் சம்பாதிக்கும் பணம் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றமுடியாமல் இருந்த கால கட்டத்தில் இதனை நிவர்த்தி செய்ய வழி தேடி திரிந்த அன்றைய கால கட்டத்தில் அதற்கு எண்ணெய் ஊற்ற வந்ததுதான் வெளிநாடு வேலை வாய்ப்புக்கள்.

    வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்கள் இருந்தாலும் செல்வதற்கு பணமில்லாமையால் தாம் இருந்த வீடுகள் ,மற்றும் நகைகள் என இன்னோரன்ன பொருட்களை ஈடு வைத்து வெளிநாடு செல்ல ஆயத்தமாகினர்.உறவுகளின் கூட்டு முயற்சியால் ஒருவர்பின் ஒருவராக வெளிநாடு செல்ல தலைப்பட்டனர் ,அன்றைய காலத்தில் வெளிநாடு செல்வதென்றால் இன்றைய காலம்போல் அல்ல நாட்டில் இருந்து வெளிக்கிட்ட உறவு வெளிநாட்டை சென்றடைய நீண்ட காலங்கள் ஆகும் .ஏனெனில் இன்றைய காலம் போல விசா எடுத்து விமானத்தில் ஆசனத்தில் அமர்ந்து பறந்து வார காலமல்ல ,ஒளிச்சு ஒளிச்சு கப்பலில் வந்த காலமது ,சாப்பாடு இன்றி தகரங்களில் அடைபட்டு பொருட்கள் ஏற்றும் கப்பலில் உயிரை பணயம் வைத்து வந்தது ஒரு புறமிருக்க இன்னோரன்ன கஸ்ரங்களை அனுபவித்து வந்த காலமது .

    மேலும் இவ்வாறான கஸ்ரங்கள் ஒரு புறமிருக்க உறவுகளை பிரிந்து வருகின்றோமே என்ற மன உளைச்சல்களின் மத்தியில் வெளி நாடு வந்த அவர்களிற்கு அதிர்ச்சிகள் பல காத்திருந்தன .வெளிநாட்டில் காலடி வைத்த எம்மவர்களிற்கு தஞ்சம் புகுந்து அவர்களின் ஒத்துழைப்புடன் சில உறவுகளை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் ,தவிர நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளை காட்டி வெளிநாடுகளில் புலம்பெயர்ந்தவர்களாக சிலர் பதியப்படனர் .அங்கு இவர்களிற்கு ஒரு முகாமைத்து கொடுத்து அவர்களிக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் வழங்கினார்கள் .ஆயினும் இவர்களிற்கு கட்டுபாடுகளும் இருந்தது குறிப்பாக
    குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாழ வேண்டும்
    தொழில் நடவடிக்கையில் நிரந்தர குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே ஈடுபட முடியும்
    வெளிநாட்டு மொழியை கற்க வேண்டும்
    குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நாட்டில் இருக்க முடியும்.(இதற்கு மாற்றீடாக இன்று குழந்தை வளரும் வரை நாட்டில் இருக்கலாம் )
    இவ்வாறான எதிர்நோக்கல்கள் ஒரு புறமிருக்க தாம் வந்த நோக்கம் நிறைவேற்ற மொழி வேறு இனம் வேறு பணம் சம்பாதிக்க இவை தடைகளாக இருந்தன .இனம் வேறு ஒரு தடையல்ல என்பதை வெளிநாட்டவர்கள் புலப்படுத்தியதன் முகமாக மொழிதான் தேவை என்பதை உணர்ந்த எம்மவர்கள் அதனை கற்று கொள்ள பட்ட கஸ்ரங்கள் கொஞ்சம் நெஞ்சமில்லை இவ்வாறு ஓரளவிற்கு மொழியை கற்றுணர்ந்து இவர்கள் வேலை தேடும் முயற்சியில் இறங்க காத்திருந்தனர்.

    வெளிநாட்டவர்களும் சம்பளம் குறைந்த வேலையாட்களை தேடி திரிந்த காலம் இவர்களும் அதற்கேற்றால் போல் தலைப்பட்டனர் .இவ்வாறாக இவர்களின் தொடர்புகள் ஊருக்கு கிடைப்பதென்றால் அன்றைய கால கட்டத்தில் காகிதமே .அது நாட்டை சென்றடைய பால் புளிச்சு ,தயிராகி;வெண்ணெய் ஆகிவிடும் ..இப்பட்டியான உறவுகளிற்கு இடையிலான விரிசலிற்கு முதற்படி இது

    பதிலளிநீக்கு
  4. நாம் இருவர் நமக்கு இருவர் என்றுதான் இருக்க வேணும் அதாவது சுயநலத்துடன் விளங்குதோ ,இப்போ வந்து உறவுகள் விரிசல் தேவைதான் எண்டு நான் நினைக்கிறன்,இல்லாட்டி மகிழ்ச்சி என்பது இருக்காது

    பதிலளிநீக்கு

 
Top