புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஒரு செம நக்கல் புடிச்ச இயக்குநர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார். அவருக்கு மொதல்ல பூங்கொத்து குடுத்து வரவேற்போம்.
வெல்கம் ஆர்.மதன்குமார்.

கதைன்னு யோசிச்சா.. த்தா இதெல்லாம் ஒரு கதையான்னு யோசிக்க வைக்கிற கதைதான். ஆனா அதை இவர் பிரசன்ட் பண்ணியிருக்கிற விதம் தான் ஜாலி. தமிழ் சினிமாவுக்கு இந்த பிரசன்டேசன் புதுசுதான். சாதாரண சீனில் கூட எதாவது ஒரு லைனில் பஞ்ச் பிடித்து காமெடி பண்ணிவிடுகிறார்.

இப்பவே டிஸ்க்ளைமர் குடுத்துடுறோம் பாஸு. படம் ஒரு தினுசாத்தான் இருக்கும். தமிழ் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், ஹவ் கான் எ கேர்ள் ஸ்லீப் வித் அ பாய் பிபோர் மேரேஜ், நெறி, பொறிண்ணு உங்க ஜீன்ல நிறைய இருந்துச்சுன்னா இந்தப் படம் உங்களுக்கு புடிக்கிறது கஷ்டம் தான். படத்தைப் பார்த்துட்டு வாட் நான்சென்ஸ் ஆப்த இடியட்ஸ் ஆப்த கல்சுரல் ஆப்தன்னு பத்து பக்கத்துக்கு பேசி பிரஸர கூட்டிப்பீங்க.

இல்ல இதெல்லாம் சகஜம் மாமேன்னு எடுத்துக்குற பார்ட்டின்னா இந்த படமும் ஜாலியாத்தான் இருக்கும். there is something about mary, american pie series இது போன்ற ஒரு படம் தான் இந்த யாருடா மகேஷ். ஸோ த சாய்ஸ் இஸ் யுவர்ஸ் யுவர் ஆனர்.

கதைன்னு பார்த்தா ஒரு சாதாரண ஒரு கல்லூரி காதல், நைட் புல்லா போன் பேசல், வீட்டில் ஆள் இல்லாத போது பொங்கல், பூரி அப்புறம் சாரி..அந்த சாரி போர்வைக்குள் காணாமல் போக சரி கதை இப்படி போகுதா என நாம யோசிப்பதற்குள் டக்கென காலேஜ் முடிஞ்சு பொண்ணு அமெரிக்காவுக்கு படிக்க போகுது.. நம்ம ஹீரோக்கு 10 சப்ஜெக்டும் அரியர்ஸ். இதெல்லாம் கிளியர் பண்ணிட்டு நீயும் அமெரிக்கா வா நாம ஒண்ணா இருக்கலாம் என லாவகமாய் கட் பண்ணிட்டு போகுது இந்த புள்ள.

நம்ப பய பீலிங்ஸ் ஆப்த லவ் ஆப்த டிசப்பாய்ண்ட்மெண்டில் அமெரிக்காவுக்கு மிஸ்டு கால் குடுத்துக்கிட்டிருக்க..கொஞ்ச நாள் கழிச்சுத்தான் கால் வருது. சாரி நான் ரொம்ப பிஸியா இருந்தேன். ஒரு முக்கியமான மேட்டரு.. நான் இந்தியா வர்றேன். நீ ஏர்போர்ட் வா என மேடம் உத்தரவு போட.. அதை நிறைவேற்றாமல் நம்ம ஆள் தூங்கி விட..ஆக்கசுலா மேட்டர் என்ன்னா அம்மணி பிரக்னெண்டாம். இது குடும்பத்துக்கும் தெரிஞ்சு ஆளாளுக்கு மாறி மாறி அறைஞ்சு தங்கள் கோபத்தை தீர்த்துக்கொண்டு ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை பண்ணிவைக்கிறார்கள். ரெண்டு வருசம் கழிச்சு பார்த்தா ஒரு குழந்தையோட இருக்காங்க.. ஆனாலும் நம்ம பயபுள்ள இன்னும் அரியர்ஸ் கிளியர் பண்ணாம வீட்டுல உக்காந்து கொஞ்சிகிட்டு இருக்க அவன என்ன பண்ணி திருத்தலாம்னு நினைக்கிறப்ப ஒரு ஐடியா வர அப்ப இன்டர்வலும் வர அப்புறம் தான் யாருடா மகேஷ் தேடல். மீதியை நீங்க வெள்ளித்திரையில் காணுங்க.

நகைச்சுவை நடிகர் ஜெகனுக்கு இந்தப் படம் நல்ல ப்ரேக் என சொல்லலாம். சந்தானத்தின் இடத்தை நிரப்புவதற்கு எல்லா தகுதிகளும் இவருக்கும் இருக்கு என நிரூபித்திருக்கிறார். சில டயலாக்குகள் மொக்கையென்றாலும் பல வசனங்கள் சிரிப்பை வரவைக்கின்றன. படம் முழுக்க இவரது தோளில் தான் சவாரி செய்கிறது. குடித்துவிட்டு தன் ஆளை தூக்கி எறிந்து கலாய்ப்பதாகட்டும், பின் அவள் பின்னால் கெஞ்சி அலைவதாகட்டும்..மனிதர் கலக்குகிறார்.

கதாநாயகி டிம்பிள். கொஞ்சம் ஷாலினி கொஞ்சம் ஜெயமாலினினு கலந்து கட்டின மாதிரி. களையான முகவாகு, கண்ணுக்கு குளிர்சியான உடல் வாகு..அப்படியே கலவரப்படுத்தும் உடைவாகும். க்ளாமர் விசயத்தில் தாராளக்கொள்கையுடைய மேடம் கண்டிப்பா ஒரு பெரிய ரவுண்டு வருவாங்க. கண்டு ரசியுங்கள் ரசிக மகா ஜனங்களே.

படத்தில் வரும் க்ளப் ஷாங்கிலும் (அதாங்க குத்துப்பாட்டு) க்ளாமர் படு தூக்கல் தான். டைரக்டர் ஒரு முடிவோடதான் இறங்கியிருக்கார். வழக்கமா இரட்டை அர்த்த வசனங்கள் வரும்போது கொஞ்சம் தயங்கி தயங்கிதான் வைப்பார்கள் இயக்குநர்கள். இவர் எந்த தயக்கமும் இல்லாமல் எப்படியும் ஏ சர்டிபிகேட் தான் தரப்போறாங்க என துணிந்து விளையாடியிருக்கிறார்.

ஆங்காங்கா சின்னச்சின்ன குறைகள் உண்டு. லிவிங்ஸ்டன் கதாபாத்திரம் அதில் ஒன்று. ஜாலியான அப்பா என்பதற்காக என்னேரம் பையனிடம் ப்ளூபிலிம் சிடி கேட்டி ஜொள்ளு விடுவதாக காட்டுவதெல்லாம் கடி. அதேபோல இரண்டாம் பாதியில் மகேஷ் என்ற ஒரு கதாபாத்திரம் இருக்கு என கதாநாயகனுக்கு தெரிந்த போது எந்த வித எமோசனும் இல்லாமல் ஏதோ காணமல் போன தங்க வாளை தேடுவதுபோல ஒரு உணர்ச்சியற்று அலைவது சிறுபிள்ளைத்தனம்.

அதே மாதிரி யாருடா மகேஷ்னு இந்த குழப்பத்தை உருவாக்குனதுக்கு இவிங்க குடுக்குற வெளக்கம் இருக்கே.. நிஜமாவே நான்சென்ஸ்.

ஆனால் காமெடி என முடிவு பண்ணி அதற்காகவே காட்சிகள் அமைத்திருப்பதால் இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை பாஸுன்னு டைரக்டர் விளக்கம் குடுப்பாரென்பதால் அதெல்லாம் பத்தி இதுக்கு மேல பேசவேண்டாம்.

கதாநாயகன் சந்தீப் கிஷன். லக்கி பெல்லோ.. ஏன்னா ஸ்கிரீன் ப்ளே ஜாலியாப் போறதால அவரோட நடிப்பப் பத்தி யாரும் பெருசா எடுத்துக்கல. அவரும் பெருசா அலட்டிக்கல.

இசை பரவாயில்லை.

படத்துல ஒளிப்பதிவாளர் ராணாவின் பங்கு முக்கியமானது. புதுமுகங்களை வைத்து எடுக்கப்படும் படங்களில் தரம் இருக்கிறதா இல்லையா என முதலில் தீர்மானிப்பது ஒளிப்பதிவை வைத்துத்தான். அந்த விதத்தில் இது டுபாக்கூர் படமெல்லாம் இல்லை..நல்ல படம் தான் என முதல் ஃரேமிலிருந்து அவர் நிரூபிக்கிறார்.

மொத்தத்தில் ஜாலியாய் ஒரு கதையை எழுதி ரொம்ப ஜாலியா எடுத்திருப்பாங்க போல.. டைம்பாஸ்க்கு ஓக்கே. மாரல் ஆஃப் த ஸ்டோரி.. கல்யாணத்துக்கப்புறம் வீட்ல சும்மாருக்க கூடாது தம்பி.. உம்புள்ளைக்கு அப்பன் நீ தானானு கூட டௌட்ட கிரியேட் பண்ணி ரோட் ரோடா அலைய விட்டுடுவானுங்க.. தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.





0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top