புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பொருளாதரச்சரிவு உள்பட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் இத்தாலியில் முன்னாள் அதிபர் ஜியார்ஜியோ
நெபோலிடானோவே மீண்டும் அதிபராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஜனநாயக கட்சியை சேர்ந்த ’என்ரிகோ லெட்டாஸ்’ என்பவரை புதிய பிரதமராக அறிவித்து இன்று பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

அதிபர் மாளிகையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு புதிய பிரதமரின் வருகையை எதிர்நோக்கி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும், புதிய பிரதமர் என்ரிகோ லெட்டாஸ் தனது மந்திரிகள் பரிவாரத்துடன் அலுவலகத்திற்கு வருவார் என எதிர்பார்த்து அவரது ஆதரவாளர்களும் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் அங்கிருந்த காவலர்களை நோக்கி சுட்டான். இதில் 2 பேர் படுகாயமடைந்தனர். அருகிலிருந்த போலீசார் அவனை மடக்கிபிடித்தனர்.

புதிய அரசு அமைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சுட்டானா? என்கிற நோக்கத்தில் விசாரணை நடந்து வருகிறது. கழுத்துப்பகுதியில் சுடப்பட்ட ஒரு போலிசாரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top