புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டாலும் பாதிக்காத வகையில் மிக உயர்ந்த கட்டிடம் ஜப்பானில் கட்டப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக நில அதிர்வுகள் ஏற்படும் நாடாக ஜப்பான் உள்ளது. இங்கு பெரும்பாலும் செங்கல் கட்டிடங்களை விட மரத்தால் செய்யப்பட்ட வீடுகள், கட்டிடங்களே
அதிகம். பூகம்பம் ஏற்பட்டாலும் உயிர் தேசம் அதிகளவில் இல்லாத வகையில் இங்கு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.

இந்நிலையில், 2,080 அடியில் விண்ணை முட்டும் உயரத்தில் டோக்கியோவில் கட்டப்பட்டுள்ள மிக உயரமான டவர் அடுத்த மாதம் முதல் செயல்பட உள்ளது. துபாயில் உள்ள புர்ஸ் கலீஃபா என்ற 2,717 அடி உயர கட்டிடம்தான் இதுவரை உலக அளவில் உயரமான கட்டிடம்.

இப்போது டோக்கியோவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் உலகின் 2வது உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. கட்டிடத்தில் பூகம்பம் மற்றும் நில அதிர்வை தாங்க கூடிய வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு டோக்கியோ ஸ்கை ட்ரீ என்று பெயரிடப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேலிருந்து கீழ் தளங்களை பார்வையிட வசதியாக துல்லியமான கண்ணாடியால் ஆன தரை, அவசர காலத்தில் உடனடியாக வெளியேற 2,532 படிக்கட்டுகள் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top