புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

திருவட்டார் பகுதியைச் சேர்ந்தவர் சுதன் ராணுவ வீரர். கர்நாடக மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவியும், 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இங்குள்ள வீட்டில் மனைவி, மகள் மற்றும் சுதனின் தந்தை ஆகியோர் வசித்து
வந்தனர்.

சுதனின் மனைவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்த வாலிபர் நள்ளிரவு நேரத்தில் சுதன் வீட்டுக்கு வந்து சென்றார். இதை அந்த பகுதியில் உள்ள வாலிபர்கள் கண்டுபிடித்தனர். அவர்கள் சுதன் வீட்டுக்கு செல்லும் நபரை பிடிக்க காத்திருந்தனர்.

நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு வழக்கம்போல அந்த வாலிபர் சுதன் வீட்டுக்கு சென்றார். பின்புற கதவை சுதனின் மனைவி திறந்ததும் அந்த வாலிபர் வீட்டுக்குள் புகுந்தார். இதை நோட்டமிட்ட அக்கம்பக்கத்தினர் சுதன் வீட்டின் பின் கதவை வெளிப்பக்கமாக பூட்டினர்.

பின்னர் வீட்டின் முன்புறம் சென்று கதவை தட்டி உள்ளே இருப்பவர்களை வெளியே அழைத்தனர். அப்போது வீட்டினுள் சுதனின் தந்தை கதவை திறந்து வெளியே வந்தார். அங்கு அக்கம்பக்கத்தினர் திரண்டு நிற்பதை கண்டு விவரம் கேட்டார். அவர்கள் சுதனின் மனைவியுடன் வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் ரகசியமாக தங்கி இருப்பதாக கூறினர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுதனின் தந்தை உள்ளே சென்று பார்த்தார். அங்கு மருமகளுடன் இன்னொரு வாலிபர் தனிமையில் இருப்பதை கண்டார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மார்பை பிடித்தபடி நாற்காலியில் சாய்ந்த அவர் அதே இடத்தில் இறந்தார்.

ஊர் மக்கள் வீட்டுக்குள் புகுந்து சுதனின் மனைவியையும், அந்த வாலிபரையும் பிடித்து வெளியே இழுத்து வந்தனர். அந்த வாலிபருக்கு அவர்கள் தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வாலிபரை பிடித்து விசாரித்ததோடு அங்கு நடந்த சம்பவங்கள் பற்றி ராணுவ வீரர் சுதனுக்கும் தகவல் கொடுத்தனர்.

அவரது தந்தை இறந்து போனதையும் கூறினர். அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து உடனடியாக ஊருக்கு புறப்பட்டார். இன்று இரவு அவர் ஊர் திரும்புவார் என தெரிகிறது. இதற்கிடையே சுதனின் மனைவி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அவரோடு இருந்த வாலிபரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top