புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கலப்படம் மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்களை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வது என்பது உலகம் முழுவதிலும் நடைபெற்று வருகிறது. இதில் அதிர்ச்சி தரும் ஒரு தகவல் சமீபத்தில் தென்கொரியா சுங்கவரி அதிகாரிகள் நடத்திய
வேட்டையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதாவது சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஆயிரக்கணக்கான மருத்துவ மாத்திரைகளை கைப்பற்றினார்கள். இவை மனித மாமிசத்தில் இருந்து தயாரிக்கப்பட்டவையாகும். இறந்த குழந்தைகளின் உடல் பகுதியை கண்டதுண்டமாக வெட்டி அதை ஒருவகை மரப்பசையுடன் சேர்ந்து சூடேற்றி பின்னர் பொடியாக்கி இந்த மாத்திரைகளை தாயரிக்கிறார்கள்.

இது போன்ற மாத்திரைகள் தயாரிப்பதைத் தடுக்க சீன அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரையில் கடத்த முயன்ற 17,450 மாத்திரைகளை கைப்பற்றினர். அவ்வாறு கைப்பற்றினாலும் இவை உடல் வலிமைக்கு ஏற்றது என்றும் அனைத்துவித நோய்களுக்கும் சிறந்த நிவாரணி எனவும் கருதுவதால் இவ்வகை மருந்தை ரகசியமாக தயாரித்து கள்ள மார்கெட்டில் விடுகிறார்கள்.

ஆனால் இதற்கு குழந்தைகள் உடல் எங்கிருந்து கொண்டுவரப்படுகிறது. யார் இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்ற விபரத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top