புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பணிப்புலம் பண்டத்தரிப்பை  பிறப்பிடமாகவும் திருகோணமலையை வதிவிடமாகவும் தற்போது கனடா ரொறொன்ரோ நகரில் வசித்து வரும்;
“சூட்டி” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற  இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்  சபாபதி தெய்வேந்திரம் அவர்கள் இன்று ரொறொன்ரோ நகரில்  சிவபதம் எய்தினார்.

அன்னார் தனலட்சுமி (குஞ்சு) அவர்களின் அன்பு மனைவியும்;

சிவபதம் எய்திய சபாபதி இராசம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்;சிவபதமெய்திய பொன்னுச்சாமி இராசம்மா                                  தம்பதியினரின் அன்பு மருமகனும்;தவேந்திரன் (தவம் - கனடா), ரவீந்திரன்-பொறியியலாளர், ராதலச்சுமி, இந்திரலச்சுமி,  விஜயலச்சுமி ஆகியோரின் அன்புத் தந்தையும்;மதி, சுபத்திரா, முத்துக்குமரன், அம்பிகைபாலன், ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்;சிவபதமெய்திய கனகம்மா, நவரத்தினம், கெங்காதேவி, மற்றும் கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரனும்;சிவபதமெய்திய சின்னத்துரை, குமாரசாமி, விசுவலிங்கம், மனோன்மணி, தேவயானி, மற்றும் தேவசேனா, நவமணி, விமலாதேவி, தேவராசா ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.


எதிர்வரும் 02.01.2013 அன்று மாலை 5 மணிக்கு பார்வைக்காக வைக்கப்படும்.ஒட்கன் மண்டபத்தில் பார்வைக்காய் வைக்கப்படும்.இறுதிக் கிரியை  03/01/2013 அன்று வியாழக்கிழமை 11:00 மு.ப — 01:00 பி.ப
St.John’s Dixie Cemetery Crematorium என்ற முகவரியில் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும்  ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றனர்.


அன்னாரது பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறை அருள் வேண்டி நிற்கின்றோம் 

துயர்பகிர: 
தவம் - 416.569.4728/905.799.4728
முத்து - 647.606.4321
ரமணி - 416.985.8010

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள்


எங்கள் அன்பு குஞ்சிஐயா.

அன்பின் இருப்பிடமாய் பாசத்தின் உறைவிடமாய் பண்பின் சிகரமாய், உழைப்பின் சிற்பமென ஊருக்கே இலக்கணமாய் பேருக்கேத்த மரியாதை கொண்டு பேரின்ப வாழ்வு பெற்றவரே, தன்னலங்கருதாமல் பிறர் நலம் பெரிதென வாழ்ந்த அற்புத மனிதரே, பிறர் வலி சுமக்க தன் வலி குறையுமெனப் புரிந்து கொண்ட பெருமகனே, ஓடியோடி உலகெல்லாம் உழைத உலகில் நிலையென ஒன்றுமில்லை என்று, உணர்ந்து வாழ்ந்த ஞானமகனே. சந்தன மேனியும் சங்கொலிக் குரலுமென சர்வமும் பெற்ற அற்புதப் பிறப்பே, அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாமல் வந்தவருக்கு உதவிட இடம்கொடுத்த உத்தமரே. நல்லவர்களை இறைவன் கைவிடுவதில்லை....நீதி இறுதியில் வெல்லும்.உங்கள் ஆன்மா நிம்மதி அடையட்டும். வாழ்நாளில் நாங்கள் அறியாமல் தவறு செய்திருந்தால் எங்களை மன்னிக்கவும் , எங்களை விட்டு உடலால் பிரிந்தாலும் எங்கள் மூச்சு கற்றாய் உங்கள் நினைவுகளுடன் வாழ்வோம். தங்கள் மலர் பாதங்களை வணங்கி மலர்களை சமர்பித்து வணங்குகிறோம்,,,,,,,,,,

உங்கள் பாசமிகு கந்தசாமி(ஞானி) 
தேவபாலன் குடும்பம் டென்மார்க்.

அனுப்பியவர் -த.பாலகுமார்


 
Top