புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவின் ஆரிகான் மாநில போலீசார் வெளியிட்ட தகவலில், நேற்று காலை சுற்றுலா பயணிகளை சுமந்து கொண்டு பனி படர்ந்த இன்டர்ஸ்டேட் 84 சாலை வழியே பஸ் ஒன்று
சென்று கொண்டிருந்தது.

அது தேசிய நெடுஞ்சாலையில் திடீரென வழுக்கி 100 அடி ஆழமுள்ள பனி நிறைந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்த போலீசார் மீட்பு படையினருடன் மலை பாங்கான பகுதிக்கு சென்று கயிறுகள் வழியே பயணிகளை மீட்டனர்.

அவர்களில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்
 
Top