
அவரது பெயர் மைக் அமிடேஜ். இவருக்கு 32 வயதில் லின்ட்சே என்ற இளம் மனைவி உள்ளார். இவர் 3வது மனைவி ஆவார். அமிடேஜுக்கு ஏற்கனவே முதல் இரு மனைவிகள் மூலம் 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர்.
இதில் மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது. இந்த நிலையில், லின்ட்சே தற்போது கர்ப்பமாக இருக்கிறார். தனக்கு 7வது குழந்தை பிறக்கப் போவதை அறிந்து பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளார் அமிடேஜ். இந்த வயதில் தந்தையாகப் போகிறோமே என்று அமிடேஜ் வெட்கமெல்லாம் படவில்லை. மாறாக படா குஷியாக காணப்படுகிறார். இன்னும் பல குழந்தைகளை லின்ட்சே மூலம் பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கண் சிமிட்டிப் புன்னகையுடன் கூறுகிறார். பலர் என்னிடம் இந்த வயதில் ஏன் இப்படி என்று கேட்கிறார்கள்.
அவர்களது கேள்வியே தவறு. நான் மனதளவில் மட்டுமல்ல உடல் அளவிலும் இப்போது இளமையாக உணர்கிறேன் என்றார் அமிடேஜ். இவர் சுர்ரேயைச் சேர்ந்தவர் 1961ம் ஆண்டு முதல் முறையாக இவர் தந்தையானார். இவரது மூத்த மகன் கிளன் அப்போதுதான் பிறந்தார். அப்போது அமிடேஜுக்கு 21 வயதுதான். அப்பெல்லாம் பிள்ளை பெத்துக்கிறது ரொம்பக் கஷ்டமானதாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. எனவே எனது மனைவி லின்ட்சே மூலம் நிறைய குழந்தைகளுக்கு பிளான் போட்டுக் கொண்டுள்ளேன் என்று கூறுகிறார் அமிடேஜ்.