புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிள்ளைகள் அவர்களது பெற்றோர்களை இறுதிவரை அன்போடும் அரவணைப்போடும் கவனித்து கொள்ளவேண்டும் என்ற புதிய சட்டத்தை சீனா கொண்டுவந்துள்ளது.


சீனாவில் தற்போது 60 வயதுக்கு மேல் 16 கோடியே 70 லட்சம் பேரும், 80 வயதுக்கு மேல் 10 லட்சம் பேரும் உள்ளனர். இப்படிப்பட்ட முதியோர்களின் பிள்ளைகள் இவர்களை விட்டு வேறு இடத்திற்கு சென்றுவிடுவதால், தனிமையில் வாடும் இவர்கள் இறுதி காலத்தில் துயரப்பட்டு இறக்கின்றனர்.

எனவே, எந்த சூழ்நிலையில் இருந்தாலும் குழந்தைகள் தங்கள் பெற்றோரை வாழ்நாள் முழுவதும் வைத்து காப்பாற்ற வேண்டும் என்ற புதிய சட்டத்தை சீன கொண்டுவந்துள்ளது. இதை மீறி செயல்படுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் என தெரிகிறது.
 
Top