புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சர்வதேச திரைப்பட விழா சென்னையில், துவங்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட, 169 படங்கள், இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன. இதன் துவக்க விழாவில், திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்
பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், பிரபலமான பாடல்களைப் பாடி அசத்தினர். இந்த விழாவில், சிறுவர்கள் மூன்று பேர், பியானோ இசைக் கருவியை வாசித்து, அனைவரின் கைதட்டல்களையும் பெற்றனர். அதில் ஒரு சிறுவன், இசைப் புயல் ரகுமானின் மகன் அமீன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் அமீனின், முதல் மேடை நிகழ்ச்சி இது தான்.

கடந்த ஒரு வருடமாக, சட்டர்ஜி மாஸ்டரிடம், பியானோ மற்றும் இசைப் பயிற்சி எடுத்து வருகிறாராம். துவக்க நிகழ்ச்சியில், தன் தந்தை இசை அமைத்த, "ரோஜா படத்தில் இருந்து குறிப்பிட்ட ஒரு பகுதியை, பியானோவில் வாசித்துக் காட்டி, அனைவரின் பாராட்டையும் பெற்றார். தந்தையைப் போல், அமீனுக்கும், இசை ஆர்வம் இருப்பதை, அவரிடம் காண முடிந்தது. தான் பிரபலத்தின் மகன் என்ற, அலட்டல் எதுவும் இல்லாமல், இசைப் பள்ளி மாணவர்களில், தானும் ஒருவராக பங்கேற்று, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார், அமீன்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top