புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஈரோடு கவுந்தப்பாடி பஸ் நிலையம் முன்பு நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீர் என்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அங்கு நின்றவர்கள் அந்த பெண்ணை 109 ஆம்புலன்ஸ்
மூலம் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவளுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன் பிறகு சனிக்கிழமை காலை அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மயக்க நிலையில் நிலையில் இருந்த அந்த பெண் சிறிது நேரத்தில் விழித்து கொண்டார். இதன் பிறகு நைசாக பிரசவ வார்டை விட்டு வெளியே வந்த அந்த பெண் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே சென்று விட்டார். இதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை.

இந்த நேரத்தில் குழந்தை அழுததால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அந்த பெண்ணை தேடினர். அப்போதுதான் அவர் குழந்தையை தவிக்க விட்டு மாயமாகி விட்டதுதெரிய வந்தது.

ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போது அவர் தனது பெயர் வெண்ணிலா (வயது 31) கணவர் பெயர் சுரேஷ், சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் என்று கூறி இருந்தார். தானும் அங்கு வசித்ததாகவும் கூறினார்.

இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தவிக்க விட்டு சென்ற அந்தபெண்ணை தேடி வருகிறார்கள். மேலும் அவர் கொடுத்தது உண்மையான விலாசம் தானா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

பெற்ற குழந்தையை அதுவும் பிரசவம் ஆன சில நிமிடங்களிலேயே குழந்தையை போட்டுவிட்டு சென்றதால், அந்த குழந்தை கள்ளக்காதலில் பிறந்ததா? என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அனாதையாக விடப்பட்ட குழந்தையை ஆஸ்பத்திரி செவிலியர்கள் புட்டிப்பால் கொடுத்து பராமரித்து வருகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top