புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கணணி உலகத்தில் புதிதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்தை எவ்வாறு உங்கள் கணணியில் நிறுவுதல் என்று பார்ப்போம். முன்னைய ஒரு பதிவில்

ஏற்கனவே ஒரு கணணியில் உள்ள ஒபெரடிங் சிஸ்டத்துடன் சேர்த்து எவ்வாறு விண்டோஸ் 8 யை dual boot அமைத்து நிறுவது என்று பார்த்தோம். அந்த பதிவை படிப்பதற்கு கிழே உள்ள முன்னைய பதிவு என்ற பகுதியில் நீங்கள் பார்க்கலாம். இன்றைய பதிவில் விண்டோஸ் 8 யை எவ்வாறு நிறுவுவது சற்று விபரமாக பார்ப்போம்.

விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவுதல் செயல்முறைகள்

முதலில் உங்கள் கணணியில் விண்டோஸ் 8 நிறுவுததற்கு தேவையான இறுவட்டு (DVD disk) அல்லது Virtual machine, அல்லது ISO கோப்பில் இருந்து கணணியை பூட் செய்து கொள்ளுங்கள்.

பின்னர் விண்டோஸ் 8 Setup கோப்புக்களை லோட் (Load) செய்வதற்காக சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும்.



அவசியமான கோப்புக்களை நகல் எடுத்த பின்னர், நீங்கள் பயன்படுத்த வேண்டிய மொழி (Language), நேரம் (Time), Keyboard input settings என்ற தகவலை கேட்டு Setup ஆரம்பிக்கும்.



நிறுவதல் செய்முறையை ஆரம்பிப்பதற்கு "Install Now " என்ற பொத்தனை அழுத்தி தொடருங்கள்.



அடுத்து தோன்றும் திரையில் நீங்கள் நிறுவும் விண்டோஸ் 8 யை அக்டிவேட் (Activate) செய்யத்தேவையான Product Key யை குறிக்க சொல்லிக்கேட்கும். விண்டோஸ் 8 க்கான Product Key யை நீங்கள் வாங்கிய இறுவட்டில் காணலாம். சரியான Product Key யை குறித்த பின்னர் "Next " யை கிளிக் செய்து தொடருங்கள். நிறுவுதல் முடிந்த பிற்பாடு அதே Product Key யை கொண்டு விண்டோஸ் 8 அக்டிவேட் பண்ணவேண்டும்.



அடுத்து விண்டோஸ் 8 க்கான licence ஒப்பந்தத்துக்கான திரை விரியும், அதை தெளிவாக வாசித்து "I accept the licence and terms " என்ற பெட்டியை கிளிக் செய்து தொடருங்கள்.



அடுத்து தோன்றும் திரையில் "Custom install windows only (Advanced )" என்ற தெரிவை தெரிவு செய்யுங்கள்.



அதை தொடர்ந்து குறித்த விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்தை எங்கே நிறுவ போகின்றீர்கள் என்பதை தெரிவு செய்யுங்கள். நீங்கள் விரும்பும் ஒரு பகிர்வை (Partition) தெரிவு செய்து "Next " யை அழுத்துங்கள். நீங்கள் நிறுவும் விண்டோஸ் 8 யை Virtual machine லிலோ அல்லது புதிய கணணியிலோ நிறுவும் பொழுது முதலில் பகிர்வை (Partition) உருவாக்குதல் வேண்டும். அதற்கு கிழே காணப்படும் "Drive Options " என்பதை தெரிவு செய்க.



"New " பொத்தானை அழுத்துவதன் மூலம் புதிய பகிர்வை (Partition) உருவாக்கி கொள்ளலாம்.



பகிர்வின் (Partition) உடைய அளவை குறிப்பிட்டு "New " பொத்தானை அழுத்துங்கள். விண்டோஸ் 8 யை நிறுவதற்கு கிட்டத்தட்ட 10 GB வரை குறித்த நிலைவட்டில் (Hard Disk ) இட வசதி தேவைப்படும். எனது வேண்டுகோல் தயவுசெய்து குறைந்தபட்சம் 20-25 GB வரை விண்டோஸ் 8 யை நிறுவ நிலைவட்டில் ஒதுக்குங்கள்.



அதை தொடர்ந்து தோன்றும் திரையில், விண்டோஸ் 8 பூட் செய்வதற்கு தேவையாக மேலதிகமாக உருவாக்கிய பகிர்வை (Partition) உறுதிபடுத்த OK கொடுத்து தொடருங்கள்.



விண்டோஸ் 8 நிறுவதற்கு சரியான பகிர்வை (Partition) தெரிவு செயுங்கள்.

குறிப்பு : இந்த படிமுறையிலேயே விண்டோஸ் 8 நிறுவும் பகிர்வினை formatசெய்துகொண்டு, "Next " யை அழுத்துங்கள்.




இறுதியாக விண்டோஸ் 8 நிறுவுதல் ஆரம்பிக்கும். ஒபெரடிங் சிஸ்டத்தை நிறுவுவதற்கும், அவசியமான கோப்புக்களை நகல் எடுத்துக்கொள்ள setup சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும்.



நிறுவுதல் செயற்பாடு முடிந்த பின்னர், விண்டோஸ் 8 Setup தானாக கணணியைreboot செய்யும். பின்னர் முதல் login னுக்கு தேவையான செயற்பாடுகள் ஆரம்பிப்பதை அவதானிப்பீர்கள்.

விண்டோஸ் 8 நிறுவுதலை தனிப்பயனாக்குதல் (Personalizing)

Reboot செயற்பாடு முடிந்த பிற்பாடு, விண்டோஸ் 8 தயாராகுவற்க்கு சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும்.


அதை தொடர்ந்து விண்டோஸ் 8 நிறுவுதலை தனிப்பயனாக்குதல் (Personalizing) அமைக்க முதலில் குறித்த கணணிக்கு பெயர் குறிக்க கேட்கும். அதை தொடர்ந்து "Next" யை கிளிக் செய்யுங்கள்.




நீங்கள் விண்டோஸ் 8 யை Wireless Network card உடன் மடிக்கணணியிலோ அல்லது சாதனங்களிலோ நிறுவும் பொழுது Wireless Network கை இணைப்பதற்கு Password குறிக்க கேட்கும். உங்களது கணணிக்கு வடக்கயிறு (கேபிள் ) மூலம் நெட்வொர்க் இணைப்பது என்றால் இந்த படிமுறையை செய்ய வேண்டியது இல்லை. தொடர்வதற்கு "Customize" யை கிளிக் செய்யுங்கள்.




அதை தொடர்ந்து, கோப்புக்களை பகிர்ந்து கொள்ள விரும்பினால் குறித்த "Yes, Turn on files sharing and connect to device " என்ற படிவத்தை தெரிவு செய்து தொடருங்கள்.



அடுத்து செக்யூரிட்டி அம்சங்களை பற்றி கேட்கும், மாற்றங்கள் தேவையான பட்சத்தில் மாற்றங்கள் செய்து "Next" யை கிளிக் செய்து தொடருங்கள்.



அடுத்து தோன்றும் திரையில் நீங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வித்தியாசமான் தகவல் அனுப்ப விரும்புகின்றீர்களா என்று தெரிவித்து, "Next" யை கிளிக் செய்து தொடருங்கள்.



அடுத்து troubleshot படிமுறை பற்றி கேட்கும், உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து "Next" யை கிளிக் செய்து தொடருங்கள்.



பின்னர் "Sign into your PC " என்ற திரை தோன்றும், விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்துக்கூரிய முழு அனுபவத்தையும் பெற விரும்பினால் Microsoft Account (Windows Live ID) யை பயன்படுத்தி கணனியினுள் நுழைந்து கொள்ளுங்கள் அதோடு "Next" யை கிளிக் செய்து தொடருங்கள்.

குறிப்பு : Microsoft Account (Windows Live ID) யை பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால் "Sign in without Microsoft Account " என்ற படிவத்தை தெரிவு செய்து தொடருங்கள்.



பின்னர் தோன்றும் திரையில் Microsoft Account Password யை குறித்து "Next" யை கிளிக் செய்யுங்கள்.



பின்னர் தோன்றும் திரையில், ஒரு வேளை நீங்கள் பயன்படுத்தும் Microsoft Account Password யை மறந்தால் மீள password யை பெற்றுக்கொள்ள தேவையான வேறு ஒரு ஈமெயில் அட்ரஸ் அதோடு கைத்தொலைபேசி நம்பர் தகவல் கொடுக்க கேட்கும். அதோடு "Next" யை கிளிக் செய்யுங்கள்.



அதை தொடர்ந்து விண்டோஸ் 8 உங்கள் கணணியையும் எல்லா அமைப்புக்களையும் தயார்செய்து கொள்ள சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும்.



அடுத்து விண்டோஸ் 8 புதிய charms bar பயபடுத்துவதற்க்கான சில டுடோரியல்ஸ் மூலம் விளக்கும்.



அதை தொடர்ந்து கிழே காணப்படும் புகைப்படத்தில் காட்டப்பட்டவாறு செயல்முறை ஆரம்பிக்கும்.


எல்லாம் சரியாக முடிந்த பின்னர், விண்டோஸ் 8 க்கான Start Screen காட்டப்படும்



இறுதியாக நீங்கள் விரும்பினால் WIN + D அழுத்தியோ அல்லது Desktop title லில் கிளிக் செய்தோ Classic View யை பெற்றுக்கொள்ள முடியும்.



முடிந்தது, இனி விண்டோஸ் 8 க்கான முழு அனுபவத்தையும் பெறுங்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top