புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியில் ரெகெர்ப்ளாட்ஸ் என்ற இடத்தில் வசிக்கும் 23 வயது இளம்பெண் தன்னுடன் தகராறு செய்யும் காதலனிடமிருந்து தன்னைக் காப்பற்றும்படி காவல்நிலையத்தை நாடிவந்தார்.


ஜேர்மனியில் மியுனிச்சில் என்ற இடத்தில் அப்பெண் தன் காதலனிடமிருந்து தன்னைக் காப்பற்றும்படி பொலிசார் உதவியை நாடியுள்ளார். உடனே விரைந்து வந்த பொலிசார் அவளையும் அவள் காதலனையும் காவல் நிலையத்துக்கு வரும்படி கூப்பிட்டுள்ளனர்.

அவள் அவர்களுடன் வர மறுத்ததால் பொலிசார் அவளது கைகளில் விலங்குகள் பூட்டி  வானில் அவளை தள்ளியுள்ளனர் என்று அவளது சட்டதரனி பிரான்ஸ் எர்ல்மேயர் ஊடகத்தினரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தொடர்பாளர் கூறுகையில், அவளை காவல்நிலையத்தில் அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளனர். ஆனால் அவள் மிகவும் பிடிவாதம் செய்ததால் நான்கு பேர் சேர்ந்து அவளை ஒரு பெஞ்சில் உட்கார வைக்க முயன்றுள்ளனர்.

ஆனால் அவளோ உட்கார மறுத்து சரிந்து விழுந்து தன் முன்னால் நின்ற பொலிசாரின் முகத்தில் காறி உமிழ்ந்து அவர் தலையில் முட்ட வந்துள்ளதால் அவர் தற்காப்புக்காக அவள் முகத்தில் குத்தியுள்ளார். இதில் அவளது மூக்கு உடைந்தது கண்கள் சிவந்தன என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் மருத்துவர் வந்து முதலுதவி அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் நடந்து ஐந்து நாட்களான பின்னர் பெண்ணை மூக்கில் குத்திய பொலிசார் மீது விசாரணை தொடங்கியது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top