புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழ் சினிமா உலகில் தனக்கென்ற ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் அஜித்தின் பாணியை பின்பற்ற நடிகர் சிம்பு முடிவெடுத்துள்ளார்.


நடிகர் அஜித் சக நடிகர்களைப்போல் அல்லாமல், ஒரு சராசரி மனிதனாக தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

அப்படி சாதாரணமாக இருப்பதாலேயே இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவருடைய தீவிர ரசிகர் நடிகர் சிம்பு என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே.

அஜித்தின் படங்களை சராசரி ரசிகன் போல், படத்தின் வெளியீட்டில் முதல் காட்சியை பார்த்துவிடுவாராம் சிம்பு.

அஜித் தான் நடித்த படங்களின் வெற்றி விழாக்களிலோ, திரையுலகம் நடத்தும் விழாக்களிலோ பெரிதாக கலந்து கொள்வதில்லை.

தன்னுடைய படங்களைப் பற்றி விளம்பரமும் கொடுப்பதில்லை. அதேபோல், இனி சிம்புவும் அஜித்தின் பாணியை பின்பற்ற முடிவு செய்துள்ளாராம்.

இதனால் பலரின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிட்டாலும் அதை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இந்த முடிவையே பின்பற்றப் போவதாக கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top