புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அசுத்தமான தண்ணீரில் சோளம் அவித்து விற்பனை செய்த வியாபாரிக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக தம்புள்ள நகரசபைத் தலைவர் ஜாலிய ஓபாத தெரிவித்துள்ளார்.


தம்புள்ள நகரில் இன்று காலை (10) நடைபெற்ற டெங்கு ஒழிப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அழுக்கு நீர் தேங்கும் குழியொன்றிலிருந்து தண்ணீர் எடுத்து நாளொன்றுக்கு 200 சோளக் கதிர்களை அவித்து விற்பனை செய்வதாக வியாபாரி ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆளும் கட்சியின் நகரசபை அமைச்சர் உட்பட 40 பேர் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் செயற்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top