புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில், விலையுயர்ந்த வைர மோதிரத்தை, உரியவரிடமே திருப்பித் தந்த பிச்சைக்காரருக்கு, உலகமெங்கும் இருந்து, ஒரு இலட்சத்து 30 ஆயிரம் நிதியுதவியும் பாராட்டும், குவிந்துள்ளது. அமெரிக்காவின், கன்சாஸ்
நகரத்தைச் சேர்ந்தவர், சாரா டார்லிங். ஒரு பிச்சைக்காரருக்கு, தன் கைப்பையில் இருந்து பணத்தையும், பொருட்களையும், கொடுத்தார். அடுத்த நாள், தன் விரலில் அணிந்திருந்த, வைரம் பதிக்கப்பட்ட திருமண மோதிரம் காணவில்லை என்பதை உணர்ந்தார். "பிச்சையிட்ட போது மோதிரம் விழுந்திருக்கலாம்' என, கருதிய சாரா, பிச்சைக்காரரிடம் சென்று விசாரித்தார்.

"அந்த மோதிரம் என்னிடம் தான் உள்ளது. நீங்கள் அதை தேடி வருவீர்கள் என்று காத்திருந்தேன்' என, மோதிரத்தை, சாரா டார்லிங்கிடம் கொடுத்தார் பிச்சைக்காரர். நெகிழ்ந்து போன சாரா, தன் கணவருடன் இணைந்து, நேர்மையான பிச்சைக்காரருக்கு நிதியுதவி அளிக்குமாறு, இணையதளம் ஒன்றில், வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, பிச்சைக்காரருக்கு உலகமெங்கும் இருந்து நிதி உதவிகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இதுவரை ஒரு இலட்சத்து 30 ஆயிரம் நிதியுதவி கிடைத்துள்ளது. எனினும், "நான் செய்தது ஒன்றும் பெரிய காரியமல்ல; இத்தனை பாராட்டுகளுக்கும் நான் தகுதியானவன் அல்ல' என கூறி, மேலும் ஆச்சரியப்படுத்துகிறார் பிச்சைக்காரர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top