புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருமணத்திற்கு பிறகு நடிகை சினேகா முதன்முறையாக நடித்து வெளிவந்து இருக்கும் படம் ஹரிதாஸ். ஆட்டிசம் பாதித்த குழந்தையை வாழ்க்கையில் வெற்றி ‌பெற வைக்க போராடும் ஒரு தந்தையின் யதார்த்த கதையை ரொம்ப
அருமையாக பண்ணியிருந்தார் டைரக்டர் ஜி.என்.ஆர்.குமாரவேலன். இப்படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்திருந்தார் சினேகா. திருமணத்திற்கு இவர் நடித்துள்ள படம் இதுவாகும். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் குறித்து நடிகை சினேகா கூறியுள்ளதாவது, யதார்த்த சினிமா ரொம்ப கஷ்டம், முதன்முறையாக நான் மேக்கப் இல்லமால் நடித்திருக்கேன். ஹரிதாஸ் படத்துல அந்த கேரக்ட்டராகவே மாறி இருக்கேன். இதுவரைக்கும் மற்றவங்க படத்தை பார்த்து தான் அழுது இருக்கேன். முதன்முதலாக என் படத்தை பார்த்து நானே அழுத படம் இது. கிஷோர், அந்த குட்டிப்பையன் இவங்க எல்‌லோரும் என்னை அழ வச்சுட்டாங்க.
 
ஹரிதாஸ் படத்தில் நான் நடிக்கலைன்னாலும் வேறு யார் நடித்திருந்தாலும் ஆட்டிசம் பாதித்த ஒரு குழந்தையின் கதையை பதிவு பண்ண படத்துக்காக இதை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்க நான் முன்வந்திருப்பேன். அவ்ளோ நல்ல படம். எந்த காப்பியும் இல்லாமல், ஒரு ஒரிஜினல் கதை ஹரிதாஸ். இந்தபடத்தில் நான் நடித்ததற்காக ரொம் பெருமைப்படுகிறேன். திருமணத்திற்கு பிறகு 2 படத்தில் நடிக்கபோகிறேன். பிரகாஷ்ராஜ் கூட ஒரு படம், இன்னொரு புதியபடம். இரண்டு படத்திலும் ரொம்ப ஸ்டிராங்கான ரோல். நானும், பிரசன்னாவும் மீடியாவுல நிறைய செய்தியாகிட்டோம். கொஞ்சம் இடைவெளி எடுத்தா நல்லா இருக்கும்னு தோனியதால தான் பேட்டி, செய்தினு எதிலும் வரல.

இவ்வாறு கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top