புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பூமியை நோக்கி வரும் பிரமாண்ட விண்கற்கள் மீது "ஸ்பிரே பெயிண்ட்' தெளிப்பதன் மூலம் பூமியைத் தாக்குவதில் இருந்து காக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார். திரவ நிலையில் இல்லாமல் வண்ணப் பொடியை
விண்கற்களின் மீது பூசுவதன் மூலம், அவை பூமியில் மோதாமல் திசை மாறி சென்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை 1902-ம் ஆண்டிலேயே ரஷியாவைச் சேர்ந்த பொறியாளர் யார்கோவ்ஸ்கி கண்டுபிடித்துள்ளார். அதன்படியே இது "யார்கோவ்ஸ்கி விளைவு' என்று அழைக்கப்படுகிறது.

இது தொடர்பாக அமெரிக்காவின் டெக்சாஸ் விண்வெளி ஆய்வு பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் டேவ் ஹெலேண்ட் கூறியது:

சமீபத்தில் ரஷியாவில் விண்கல் விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. விண்கற்களில் வண்ணப் பொடிகளை பூசுவதன் மூலம் இதனைத் தவிர்க்க முடியும். பூமியை நோக்கி வரும் விண்கற்கள் மீது வண்ணப் பொடி பூசும்போது, சூரியன் அதன் மீது பிரதிபலிப்பதில் மாற்றம் ஏற்பட்டு அதன் வெப்பநிலையில் சமனற்ற சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே அது வழக்கமான பாதையில் இருந்து மாறி பூமியில் மோதாமல் பக்கவாட்டில் விலகிச் சென்றுவிடும்.

இது சாத்தியம்தானா என்ற கேள்வி பலருக்கு உள்ளது. ஆனால் இதன் பின்னால் உள்ள அறிவியல்ரீதியான உண்மைகள் நிச்சயமானவை. இதனை நாம் ஒருமுறை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு இத்திட்டத்தை மேம்படுத்தித் தருமாறு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஹெலேண்டை அணுகியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top