புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் 106 வயது மூதாட்டி ஒருவர், நீண்டகால போராட்டத்திற்கு பிறகு தனது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பட்டயச் சான்றிதழ் பெற இருக்கிறார்.


ரேபா வில்லியம்ஸ் என்ற அந்த பெண்மணி ஒஹையோ நகரிலுள்ள உயர்நிலைப்பள்ளியில் இறுதியாண்டு படித்து முடித்தார்.

ஆனால் ஆசிரியை வழங்கிய ஒரு புத்தகத்தை வாசிக்க மறுத்ததால் அவருக்கு சான்றிதழ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுபற்றி ரேபா வில்லியம்ஸ் கூறுகையில்...


‘ஆசிரியை கொடுத்த புத்தகத்தை நான் ஒரு முறை படித்து முடித்து விட்டேன். மீண்டும் வாசிக்க சொன்னதாலேயே மறுத்தேன்´ என்கிறார்.

தனது கல்விச்சான்றிதழை பெறுவதற்காக அவர் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியதானது. இப்போது அவருக்கு கல்வி பட்டயச் சான்றிதழ் வழங்க கல்வி துறை ஒப்புதல் வழங்கி விட்டது.

இதனை அடுத்த அவர் தனது 106-வது வயதில் பட்டம் பெற போகிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top