புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வெளிநாட்டில் வாழும் கணவனுடன் சேர்ந்து வாழ புறப்பட்ட இளம் மனைவி, விமான நிலையத்தில், வழியனுப்ப வந்த உறவினர்களை ஏமாற்றி, கள்ளக் காதலனுடன் தப்பியோடினார்.

கேரளாவின், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த, 26 வயது பெண்ணுக்கும், பக்ரைன் நாட்டில் பணியாற்றும் நபருக்கும், சில ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது; திருமணம் முடிந்த கையுடன், கணவர், வெளிநாடு சென்று விட்டார்.தாய் வீட்டில் வசித்த அந்த பெண்ணுக்கும், அருகே வசிக்கும் வாலிபர் ஒருவருக்கும், கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த, அப்பெண்ணின் வீட்டார், பெண்ணை, கணவனுடன் அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்தனர்.நேற்று முன்தினம், கொச்சி விமான நிலையத்தில் இருந்து, பக்ரைன் செல்லும் விமானத்தில், அந்த பெண்ணை அனுப்பி வைக்க முடிவு செய்தனர்; அவரை அழைத்துக் கொண்டு, விமான நிலையம் சென்றனர்.

சோதனைகள் முடிந்து, விமானத்திற்குள் ஏறுவதற்காக, “வெயிட்டிங் ஹாலில்’ அந்தப் பெண் காத்திருந்தார். வழியனுப்ப வந்தவர்கள், வெளியே இருந்தனர். அவர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்ட அந்த பெண், “”நான் விமானத்தில் ஏறி விட்டேன்; நீங்கள் புறப்படுங்கள்,” என்றார்.அதை உண்மை என, நம்பிய உறவினர்கள், விமான நிலையத்தில் இருந்து வெளியேறினர்.

அதை உறுதி செய்த அந்தப் பெண், விமான நிலைய அதிகாரிகளிடம், “”என் உறவினர் இறந்து விட்டார்; நான் உடனடியாக செல்ல வேண்டும்; பயணம் மேற்கொள்ள போவதில்லை; வெளியே செல்ல அனுமதியுங்கள்,” என, பதற்றத்துடன் கேட்டார்.இதை அடுத்து, அவரது பயணச்சீட்டு மற்றும் இருக்கை பதிவு ஆகியவற்றை ரத்து செய்த அதிகாரிகள், அவரை வெளியேற அனுமதித்தனர்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அப்பெண்,
அங்கு தயாராக இருந்த கள்ளக் காதலனுடன் தப்பினார்.மனைவி வருவாள் என, பக்ரைன் விமான நிலையத்தில் காத்திருந்த, கணவனுக்கு, மனைவி தப்பிஓடிய தகவல் தெரிந்ததும், கண்ணீர் விட்டு கதறினார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top