புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழகத்தின் கோவை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடராஜன். இவர் தனது மனைவி சரோஜினியை கடந்த 13-ம் திகதி முதல் காணவில்லை என்று பொலிசில் புகார் செய்திருந்தார்.


இந்தநிலையில், 19-ம் திகதி எதிர்வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதனை பொலிசார், சோதனை செய்த போது, சரோஜினி 6 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டு, மூட்டையில் கட்டியிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சிட்டி கமிஷனர் விஸ்வநாதன்,

சரோஜினியின் கொலையில் சம்மந்தப்பட்ட கொலையாளி யாசர் அராபத். ஆயிரத்து 200 கி.மீட்டர் தொலைவில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவனை பிடித்தோம்.

அவன் தனது முதல் கட்ட வாக்குமூலத்தில் கொலையின் மூலமாக சில நகை உள்பட ஆதாயங்கள் கிடைக்கும் என நினைத்து கொலை செய்தாக கூறியிருக்கிறான்.

அவனை கோவைக்கு கொண்டுவர இரண்டு நாட்கள் ஆகும். இவ்வாறு கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top