புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 20 நாட்களான சிசு ஒன்று திடீர் மரணமடைந்துள்ளதாக குறித்த வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி இன்று தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணம் பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த ஜெயரூபன் கவிநயா (20 நாட்கள்) என்ற சிசுவே மரணமடைந்துள்ளது.

இந்த சிசு மரணம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

சடலத்தை புதைக்குமாறு யாழ். பருத்தித்துறை நீதிவான் சிறிநீதி நந்தசேனன் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சிசுவின் மரணம் தொடர்பில் பூரண மரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக நரம்பியல் சத்திர சிகிச்சைப் பிரிவு

யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக நரம்பியல் சத்திர சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் சிறிபவானந்தராசா தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நரம்பியல் தொடர்பான சிகிச்கைக்காக இவ்வளவு காலமும் கொழும்பையே நம்பியிருந்ததாவும் இனிமேல் அவ்வாறான நிலைமை இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக வெளிநாட்டு உதவிகளை தாம் எதிர்பார்ப்பதாகவும் இந்த நிதியின் உதவியுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதியில் இந்த நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவினை அமைக்க முடியும் என கூறினார்.

அத்தோடு சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் நரம்பியல் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில் நரம்பியல் சிகிச்சைக்கான தனியான கட்டிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலைப் பிரதிப்பணிப்பாளர் சிறிபவானந்தராசா தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top