புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அழகான ஆண்கள் சுமாரானவர்களைவிட 22 சதவீதம் அதிகம் சம்பாதிக்கக்கூடியவர்கள் என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் பொருளாதார நிபுணர் டாக்டர் ஆன்ட்ரூ லீ மற்றும் பேராசிரியர் ஜெஃப்
போர்லேண்ட் ஆகியோர் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் ஆய்வில் அழகான ஆண்கள் பிறரை விட அதிகம் சம்பாதிக்கக்கூடும் என்று தெரிய வந்தது.
ஒரு வேலையைச் செய்ய அழகான ஆண்கள் சுமாரான ஆண்களை விட 22 சதவீதம் அதிகம் சம்பாதிக்கக்கூடும். மேலும் சுமாருக்கும் கீழே உள்ள ஆண்கள் சுமாரான ஆண்களை விட 26 சதவீதம் குறைவாக சம்பாதிக்கிறார்களாம். அதுவும் ஒரே மாதிரியான வேலைக்கு அழகான ஆண்களுக்கு அதிக சம்பளமும், சுமாரும், அதற்கு குறைவான ஆண்களுக்கு குறைவான சம்பளமும் கிடைக்கிறது.
சுமாருக்கும் குறைவான ஆண்களுக்கு திருமணம் நடப்பதும் கடினமாம். இந்த ஆய்வு முடிவு பெண்களுக்கு பொருந்தாதாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top