புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்..மார்ச்25,26,27உணவு உண்ணுதல் மற்றும் நித்திரை போன்றவற்றில் கால தாமதம் ஏற்படலாம்.ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் உண்டாகும். தாய் வழிச் சொந்த பந்தங்களால்
ஆதரவுகள் வந்து சேரும்.புதியதாகக் கடன் வாங்க செய்த முயற்சிகளில் வெற்றி பெறச் சற்று கால தாமதம் ஆகலாம். நாட் பட்ட சொத்து விசயமான அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம்.மார்ச்28,29,30காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களால் திரும்பக் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.சூதாட்டமாகிய ரேஸ்,லாட்டரி போன்ற விசயத்தில் பணம், பொருள் ஏமாற்றம் அடைய நேரிடும்.செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர்கள் வரக் கூடும் என்பதால் கவனம் தேவை. காய்கறிகள்,இலை கீரை போன்ற உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள், தபால் தந்தித் துறை சார்ந்தவர்கள்,அச்சுத் தொழிற் கூடங்களை நடத்துவோர்கள்,கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர்களுக்கு மிகவும் நற்பலன் தரும் காலமாகும்.மார்ச்31உடம்பில் சளி, அல்ர்ஜி மற்றும் சீதளம் ஆகிய தொல்லைகள் வந்து போகும்.நீண்ட காலமாக இருந்து வந்த பிணிகளுக்கு புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்கும்.துலை தூரப் பயணங்களில் மிகுந்த கவனமுடன் சென்று வருதல் நல்லது. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்

2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். மார்ச்25,26குழந்தைகளால் பெயர் புகழ் ஏற்படலாம்.உற்றார் உறவினர்களால் மன நிம்மதி இன்மையும்�� காரணமற்ற பொருட் செலவுகளும் உண்டாகும்.அரசியல் வாதிகளால் சில எதிர்பார்க்காத ஆதாயங்கள் அடைவீர்கள்.தாயின் உடல் நிலையில் ஏற்படும்.பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் வந்து சேரும்.வடக்குத் திசையில் இருந்து சில நற் செய்திகள் வந்து சேரும்.மார்ச்27,28,29விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர்ந்து அவற்றில் வெற்றி பெறுவீர்கள்.பொருளாதாரம் சுமாராகக் காணப்படும்.நீண்ட தூரப் பயணங்களின் மூலம் சந்திக்க வேண்டிய நபர்களை சந்திப்பதில் கால தாமதம் ஏற்படலாம். பூ பழம் இவற்றை ஏற்மதி இறக்குமதி செய்வோர்கள்,இனிப்பு சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள், பூஜை சாதன வியாபாரிகள்,கம்யுட்டர் துறையைச் சாரந்தவர்கள்,நறுமணப் பொருட்களின் வியாபாரிகள்,கல்லூரிப் பேராசிரியர்கள்,சேர் மார்க்கெட் மற்றும் கொடுக்கல் வாங்கல் போன்ற தொழிற் செய்வோர்கள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.மார்ச்30,31 அரசியல் வாதிகள் மிகவும் எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் சிறந்ததாகும். தீராத பழைய வழக்குகளில் நல்ல முடிவுகளை எதிர் பார்க்கலாம்.வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:வடகிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து வரவும்.


3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்25,26விட்டுப்போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும்.மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதிப் படாதீர்கள்.காவல் துறை,இராணுவம்,தீயணைப்புத் துறை சார்ந்தவர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,கேஸ் வெல்டிங், பெட்ரோல்,மண் எண்ணை,டீசல் சம்பந்தமாகிய பொருட்களின் வியாபாரிகள் நல்ல லாபம்அடைவார்கள்.மார்ச்27,28
கலைத்துறையினர்கள் மற்றும் அரசியல் வாதிகளிடம் ஏமாற்றம் அடையாமல் இருங்கள். உத்தியோகத் துறையினர்கள் மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.அரசியல் வாதிகளிடம் இருந்து எதிர் பார்த்த ஆதாயம் கிடைக்கும்.கணவன் மனைவி உறவுகளில் பிரச்சனைகள் வந்து நீங்கும்.உடம்பில் தலை மற்றும் முகம் ஆகிய உபாதைகள் வந்து தீரும். மார்ச்29,30,31உற்றார் உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் நிம்மதியும் வந்து சேரும்.வங்கிகளின் மூலமாக எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். கோர்ட் வுழக்கு சம்பந்தமாகிய விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியம் கை கூடும்.புதிய நண்பர்கள் சேர்க்கையால் கூட்டுதொழில் முயற்சிகளில் எதிர்பாராத லாபம் அடையலாம். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-சூரிய வழிபாடு செய்து வரவும்.


4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்25,26வெளிநாடு சென்று வருதல் சம்பந்தமான முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரும். பொதுப்பணித் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர்கள், பொதுப்பணித் துறையைச் சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், வக்கீல்கள் அச்சுத் தொழிற் செய்வோர்கள்,ஸ்டே~னரி சம்பந்தமான நோட்டு பேனா புத்தகம் போன்ற வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலன் அடைவார்கள்.காதல் சம்பந்தமான விசயங்களில் மிக கவனம் தேவை.மார்ச்27,28,29சம்பந்தம் இல்லாத நபர்களால் காணாமற் போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும்.புதிய தொழில்களை ஆரம்பம் செய்ய எண்ணுவீர்கள்.ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகள் இட மாற்றம் ஏற்படலாம். செய்தொழிலில் புதிய கூட்டு முயற்சிகளைத் தவிர்க்கவும். தேவையில்லாமல் பழைய பிரச்சனைகள மீண்டும் தலை தூக்க வாய்ப்பு உள்ளது. சேர் மார்க்கெட்டில் ஈடுபாடு உடையவர்கள் கவனமுடன் இருக்கவும்.மார்ச்30,31அடிமை ஆட்களால் பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் ஏற்படலாம். உறவினர்களின் வருகையால் பொருள் வரவு உண்டாகும். காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கும்.குல தெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவி~;ணு வழிபாடு செய்து வரவும்.


5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்18,19பெண்களால் தூரத்தில் நற் செய்திகளைக் கேட்பீர்கள்.திருட்டுப் போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும்.உடல் நலத்தில் மூலம், வயிறு சம்பந்தமாகிய தொல்லைகள் வந்து போகும். வங்கிகளில் இருந்து எதிர் பார்த்த கடன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. Nவுற்று மதத்தவரால் வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்கள் பலன் கிடைக்கும்.

மார்ச்20,21,22மூத்த சகோதரர்களால் குடும்பத்தில் சிற் சில பிரச்சனைகளைச் சந்தித்து மன நிம்மதி குறையலாம்.திரவ சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள்,பூஜைப் பொருள் வியாபாரிகள்,நீர்வளத்துறை சார்ந்தவர்கள்,தாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர்கள்,உப்பு வியாபாரிகள், படம் மற்றும் கண்ணாடி போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,மருத்துவத் துறைகளை சார்ந்தவர்கள்,மருந்துவ கல்லூரி மாணவர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள்.

மார்ச்23,24பூமி நிலம் வாங்குதல் போன்ற நீண்ட கால முயற்சிகளில் தற்போது வெற்றி அடைவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருள் இழப்பும், வீண் பிரச்சனைகளும் ஏற்படும்.நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடவும்.கோர்ட், வழக்கு சம்பந்தமான விசயத்தில் அநுகூலமான நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து அரிசி தானம் செய்து வரவும்.


6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்..மார்ச்18,19யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களால் சில நன்மைகள் வந்து சேரும்.நாட் பட்ட வழக்கு விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.தாய் தந்தையர்கள் உறவுகளில் வந்துள்ள பிரச்சனைகள் தீரும்.வெளிநாடு செல்லுவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்ய முயற்சிகள் செய்வீர்கள்.

மார்ச்20,21 தீராத பிரச்சனைகளுக்கு பெரியமனிதர்கள் உதவியால் தீர்வு கிடைக்கும்.உடம்பில் சளி அலர்ஜி போன்ற நோய்கள் வந்து போகும்.திடீர் அதிர்~;டம் மூலம் தன வரவு உண்டாகும்.வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கை வந்து சேரும்.சிலருக்கு வீடு மற்றும் தொலிற் சாலைகள் இடமாற்றம் ஏற்படலாம். உத்தியோகத் துறையினர்களுக்கு பதவி உயர்வுகளுடன் கூடிய பணி இட மாற்றம் ஏற்படக் கூடும்.

மார்ச்22,23,24எதிர் பாராத விருந்தினர்கள் வரவால் சில ஆதாயங்களை அடைய தென்திசையில் இருந்து பெண்களால் ஆதாயம் உண்டாகும்.சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டு மன நிறைவடைவீர்கள். உறவினர்களின் எதிர் பாராத வரவுகளால் பொருட் செலவுகள் வந்து சேரும்.முன் கோபம் தவிர்த்தல் உகந்ததாகும்.குல தெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்.
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-ஐயப்பன் வழிபாடு செய்த வரவும்.


7.துலாம்:-துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்18காரணமற்ற சிறிய விசயங்களுக்காக குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும்.கலைத் துறையினர்களும்,அரசியல் வாதிகளும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

மார்ச்19,20,21யாத்திரையின் காரணமற்ற விசயங்களுக்காக வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பயணம் செய்யவும். வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கைக்கு வந்து சேரும் காலமாகும்.. நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்கள், இராணுவத் தொழில், போலீஸ், தீயணைப்பு துறையைச் சார்ந்தவர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,கார சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,கேஸ் வெல்டிங் போன்ற தொழிற் செய்வோர்கள், நிலக்கரி தொழிற்சாலைகளில் பணி செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள்.

மார்ச்22,23,24உடம்பில் மேகம் மற்றும் உஷ்ண சம்பந்தமான பீடைகள் வந்து விலகும்.பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றம் காணப்படும். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்காக முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் இதுநாள் வரையில் தடை பட்டு வந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.தூரத்து யாத்திரையின் மூலமாகச் சந்திக்க வேண்டிய நபர்களை சந்தித்து காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியன எண்:-9
இராசியன நிறம்:-சிகப்பு
இராசியன திசை:-தெற்கு
பரிகாரம்:-துர்க்கை வழிபாடு செய்து துவரை தானம் செய்யவும்.


8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்18,19,20வர வேண்டிய சொத்துக்கள் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். நண்பர்களால் வீண் பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் ஏற்படலாம்.திருமணம் போன்ற சுபகாரிய விசயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்.குடும்பச் சொத்துக்கள் பிரிவினை போன்ற விசயத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.ரேஸ்,லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தன வரவு உண்டு.மார்ச்21,22 நெருப்பு கேஸ்,சிற்றுண்டி சாலைகள்,அரிசி மற்றும் பலசரக்கு சம்பந்தமாகிய தொழிற் செய்பவர்கள்,அரசியல் வாதிகள்,நீதிமன்றத்தில் பணி புரிவோர்கள்,வழக்கறிஞர்கள் மருந்து வியாபாரிகள்,மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடையலாம்.பிள்ளைகளால் எதிர் பாராத தன வரவுகள் உண்டாகுவதோடு அவர்களால் பொருட் செலவும் உண்டாகும்.மார்ச்23,24வேற்று மதத்தவரால் ஆதாயம் ஏதும் இல்லை.உத்தியோகத் துறையினர்களுக்குப் பணிஇட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் தேடி வரும் காலமாகும்.தீர்த்த யாத்திரை சென்று வரப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.வண்டி வாகனங்களில் செல்லுவோர்கள் யாத்திரையின் போது பெரிய மனிதர்கள் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் நன்மைகள் அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.


9.தநுசு:-தநுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்18,19குல தெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகள் தடையின்றி நிறை வேறும்.புதிய நண்பர்களின் சேர்க்கையால் மன மகிழ்ச்சி உண்டாகும்.பங்குத் தொழிலில் ஓரளவ முன்னேற்றம் காணுவீர்கள்.நீண்ட காலமாக வராத கடன் கொடுத்த பணம் திரும்பிக் கை வந்து சேரும்.மார்ச்20,21காதல் விசயத்தில் நல்ல தகவல்கள் வந்து சேரும். யாத்திரைகளால் எதிர் பார்த்த காரியங்கள் நிறைவேற இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில்கள் ஆரம்பம் செய்ய போட்ட திட்டங்கள் நிறை வேறும்.பிறர் நடத்திக் கொண்டிருக்கும் தொழில் ஸ்தாபனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவுகள் மூலம் நிறைவேறும்..மார்ச்22,23,24அரசு வழக்குகளில் அநுகூலமான தீரப்புகள் கிடைக்கும். மார்ச் விவசாயம் செய்வோர்கள், காய்கறிகள்,பழ வியாபாரிகள்,பூஜை பொருள்,உப்பு வியாபாரிகள்,தண்ணீர் கூல்டிரிங்ஸ் போன்ற உணவு வியாபாரிகள் மற்றும் நறுமணப் பொருள் வியாபாரிகள்,ரத்தின வியாபாரம் செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.உடல் நிலையில் கண்�� காதுகளில் கவனமுடன் இருக்கவும்.நாட் பட்ட விசா சம்பந்தமான பிரச்சனைகள் தீர வாய்ப்புகள் உள்ளது.பொதுவாக இது ஒரு சுமாரான நற் பலன் தரும் வாரமாகும்.

இராசியன எண்:-5
இராசியன நிறம்:-பச்சை
இராசியன திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவி~;ணு��ஆஞ்சனேயர் வழிபாடு செய்து பாசிப்பயிறு தானம் செய்யவும்


10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்18செய் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகளில் மேலும் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.இது வரை விடை காண முடியாத நோய்களுக்கு விடை காணும் காலமாகும்.தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனமுடன் இருக்கவும்.மார்ச்19,20,21உடம்பில் முதுகு மற்றும் கால்களில் நோய்கள் வந்து விலகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது.யாத்திரையில் குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவும்.புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உள்ளது.வீடுகளில் கவனமுடன் இருந்தால் திருட்டுப் போவதை தடுக்கலாம்.மார்ச்22,23,24ஆடம்பர அலங்காரப் பொருட்கள்,கட்டில் மெத்தை போன்ற பொருட்கள்,இராசானம்,கமிசன்,தரகுத் தொழிற் செய்வோர்கள்,மரம்,காய்கரி வியாபாரிகள்,தபால் தந்தித் துறையினர்கள்,பத்திரிக்கைத் துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். புதிய ஆடை அணிகலன் ஆபரணங்களை வாங்குவீர்கள்.நண்பர்கள் மற்றும் உரவுகளின் மூலமாக எதிர் பாராத பொருட் செலவுகள் வரக் கூடும்.யாத்திரையில் கவனமுடன் பயணம் செய்யவும். குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக வெளியூர் பிரயாணங்களை மேற் கொள்ள நேரிடும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்க
பரிகாரம்:-மஹாவி~;ணு வழிபாடு செய்து வரவும்.


11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்18,19நண்பர்களால் சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும்.புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்.தனப் புழக்கம் நன்றாக இருக்கும். காதல் சம்பந்தமான விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.நீண்ட காலமாக வங்கிகளில் இருந்து எதிர் பார்த்த பணம் கிடைக்கும்.மார்ச்20,21அரசியல் வாதிகளுக்கு புதிய பதவிகளும் மற்றும் நற்பெயர் புகழும் உண்டாகும் காலமாகும். பிள்ளைகளுக்கு இதுவரையில் தடை பட்டு வந்த திருமண போன்ற சுப காரியங்கள் நிறை வேறும்.தாய் தந்தைகளுக்கு உடல் நிலையில் சிற் சில பாதிப்புகள் வந்து விலகும். மார்ச்22,23,24இரும்பு இயந்திரம்,இரசாயன சம்பந்தமான தொழில்கள்,எண்ணை வியாபாரம் செய்வோர்கள்,பெட்ரோல் டீசல் வியாபாரிகள்,பல சரக்குத் தொழில் வியாபாரம் செய்வோர்கள்,பழைய இரும்புப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவரர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளிடம் முன் கோபத்தை தவிர்த்து மிகவும் எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது.கண் மற்றும் காதுகளில் கவனம் தேவை.துலை தூரப் பயணங்களில் மிகவும் கவனமுடன் சென்று வரவும். உடம்பில் நரம்பு மற்றும் உணவுக் குழல் சம்பந்தமான பீடைகள் உண்டாகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியன எண்:-8
இராசியன நிறம்:-நீலம்
இராசியன திசை:- தென் மேற்கு
பரிகாரம்:-ஐயப்பன் வழிபாடு செய்து எள் தானம் செய்யவும்.


12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்18,19திருமணம் ஆகாதவர்களுக்கு மணம் ஆகும் காலமாகும். ப10ர்வீகச் சொத்துக்களில் வெகு காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து மன மகிழ்ச்சி அடைவீர்கள்.ஒரு சிலருக்கு சொத்துக்களை விற்பதில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.வெளி நாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.மார்ச்20,21,22 கார் லாரி போன்ற வாகனத் தொழில்கள் செய்வோர்கள்,ஆடம்பர அலங்காரப் பொருள்களின் வியாபாரிகள்,நாடகக் கலைஞர்கள்,சினிமா துறை சார்ந்தவர்கள், நறுமணப் பொருள் வியாபாரிகள், சிற்றுண்டி வியாபாரிகள்,நவரத்தினம் மற்றும் வெள்ளி வியாபாரிகள் ஆகிய இவர்களுக்கு நற்பலன் உண்டாகும் பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிப் பொருளாதாரம் சீராக இருக்கும்.மார்ச்23,24புதிய ஆடை அணி கலன்களை வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள்.பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத்தொழிற் செய்வதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளி போடவும்.குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து மனஅமைதி ஏற்படும். புதிய வீடு நிலம் கார் போன்றவை வாங்குவீர்கள்.ஒரு சிலருக்கு நண்பர்கள் மற்றும் பங்காளிகளால் ஆதாயம் உண்டாகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரக் கூடிய வாரமாகும்.

இராசியன எண்:-6
இராசியன நிறம்:-வெள்ளை
இராசியன திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹால~;மி வழிபாடு செய்து மொச்சை தானம் செய்யவும்.
 
Top