புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியிலுள்ள மியுனிச் நகரத்தில் இருந்த ஒரு பெண் வேலை கிடைக்காத காரணத்தால் வேலையற்றோருக்கான அரசு உதவித் தொகை பெற்று காலம் கடத்தி வந்துள்ளார்.

இவரது தாயும் ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார். திடீரென்று அவரது தாய் இறந்து போன நிலையில் இறுதிச்சடங்கு செய்யக் கையில் பணம் இல்லை என்பதால் பிணத்தை அடக்கம் செய்யாமலேயே 8 மாதமாக வீட்டின் சோபாவில் கிடத்தி வைத்திருக்கிறார்.

கடந்த வியாழயன்று கடன் மீட்பு அதிகாரி இவர்கள் வாங்கிய கடனைத் திருப்பி கேட்க வீட்டிற்கு சென்று சோதனை செய்தபொழுது இறந்துபோன மூதாட்டியின் பிணத்தைப் பார்த்து பொலிசுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

தாயின் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக ஒரு வேளை இந்தப் பெண் தாயின் மரணத்தைப் பதிவு செய்யாமல் இருந்திருப்பாரோ என்ற சந்தேகமும் சிலருக்கு தோன்றியது. ஆனால் விசாரணை அதிகாரிகள் இதை மறுத்துவிட்டனர் என்று ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.

இறுதிச்சடங்கு செய்யப்பணம் இல்லை என்றால் அரசுக்கு விண்ணப்பித்து 3200 யூரோ பெறலாம் என்று ஒரு கூடுதல் செய்தியையும் இந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.
 
Top