
கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் இந்தியா நோக்கி பயணிக்க இருந்த சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தங்க பிஸ்கட் விற்பனையாளரிடமிருந்து தங்க பிஸ்கட்களை கடந்த 18ம் திகதி சந்தேகநபர் திருடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.