புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காதல் தோல்வி ஏமாற்றங்களில் இருந்தும் மீண்டுள்ள நயன்தாரா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் எல்லோருடனும் கலகலப்பாக பேசி, சகஜமாக பழகுகிறார். ஐதராபாத்திலிருந்த நயன்தாராவுடன் ஒரு பேட்டி.

எதிர் காலத்துக்கென திட்டங்கள் ஏதேனும் வைத்துள்ளீர்களா?

இதற்கு பதில் சொல்ல இயலாது. எதிர் காலம் என்பது நம் கையில் இல்லை. கடவுள் கையில் இருக்கிறது. கடவுள் நினைக்கிற படிதான் எல்லாம் நடக்கும்.

ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்ததிலிருந்து கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று மறுத்து வருகிறீர்களாமே?

நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றோ அல்லது நடிப்பேன் என்றோ எங்கேயும் சொன்னது இல்லை. எப்படி நடிக்க வேண்டும் என்பது என் கையில் இல்லை. கதைதான் முடிவு செய்கிறது.

ஒரு நடிகை எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருக்க வேண்டும். கதைக்கு கவர்ச்சியோ குடும்ப பாங்கான வேடமோ எது தேவைப்பட்டாலும் அதை கொடுக்கவேண்டும். கதை பிடித்து இருந்தால் என்ன மாதிரி நடிக்க வேண்டுமோ அதன்படி நடிப்பேன்.

நான் கவர்ச்சி, குடும்ப பாங்கு என்று இரு வேடங்களிலும் நடித்து விட்டேன். ரசிகர்கள் கவர்ச்சியாக நடித்த போதும் என்னை ஏற்றனர். குடும்ப பாங்காக நடித்த போதும் ஏற்றனர்.

தமிழில் தற்போது மூன்று படங்கள் கைவசம் உள்ளது. அஜீத், படத்தை முடித்து விட்டு உதயநிதி ஜோடியாக கதிர்வேலன் காதலி படத்தில் நடிக்கிறேன்.

கோவையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. ஐயா படத்துக்கு பின்னர் குடும்ப பெண்ணாக இப்படத்தில் வருகிறேன்.

தமிழில் சிறிய இடை வெளிக்கு பின்னர் வந்தாலும், பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். சினிமா வாழ்க்கை நன்றாக போகிறது.

திருமணம் எப்போது?

திருமணத்தை பற்றி நான் யோசிக்கவே இல்லை. என் வாழ்க்கையில் எதிர்பாராதவை நிறைய நடந்துவிட்டன. எது எப்போது வரவேண்டுமோ அதெல்லாம் அவ்வப்போது வந்து போய்விட்டன. எதிர் காலம் என்ன என்பதை நான் சிந்திக்கவில்லை.
 
Top