புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



சுவிஸ்சில் கடந்த 2012ம் ஆண்டு மக்கள்தொகை எட்டு மில்லியன் என்றால் கோழிகள் 10 மில்லியனாகும் என்று தேசியப் புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த பத்து மில்லியன் கோழிகளில் கால்பகுதியை சுவிட்சர்லாந்தில் வைத்து முட்டையிடவும், குஞ்சு பொரிக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக 50 சதவிகிதம் கோழிகள் மூலமாகவே நாட்டின் தேவைகள் நிறைவேறியதால் மீதம் 50 சதவிகிதம் கோழிகள் தற்பொழுது இறக்குமதி செய்யப்படுகிறது.

கால்நடைகளின் எண்ணிக்கை குறித்து புள்ளியல் துறை வெளியிட்ட அறிக்கையில், முன்புமிருந்ததை விட பசுக்கள் 1 சதவிகிதம் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது என்றும் பன்றிகளின் எண்ணிக்கை 2 சதவிகிதம் குறைந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், செம்மறியாடும் இரண்டு சதவிகிதம் குறைந்துவிட்டதால் அதன் எண்ணிக்கை 4,14,000 ஆக மாறிவிட்டது என்றும் வெள்ளாடு மற்றும் குதிரை எண்ணிக்கையில் தலா ஒரு சதவிகிதம் உயர்ந்துவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.

 
Top