புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலைச் சிகரமான கிளிமஞ்சாரோவில் ஏறி 7 வயது இந்திய சிறுவன் சாதனை படைத்துள்ளான்.

இந்திய கடற்படை அதிகாரி கமாண்டர் பாலாஜியின் மகனான ஆர்யன் என்ற இந்த சிறுவன் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி கடந்த ஆண்டில் சாதனை புரிந்தான்.

அதனையடுத்து 5554 மீட்டர் உயரமுள்ள கல்பதரு மலையின் மீதேறி சாதனை ஏற்படுத்தியதுடன் ஆர்யனின் சாகசப் பயணம் முற்றுப் பெறவில்லை.

5895 மீட்டர் உயரமுள்ள ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி, அங்கு இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து தனது முந்தைய சாதனைகளை ஆர்யன் முறியடித்துள்ளான்.

இந்த மலைச்சிகரத்தின் உச்சியை சென்றடைந்த முதல் 7 வயது சிறுவன் என்ற உலகப் புகழையும் ஆர்யன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top