புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கமல் ஹாசன் தனது நண்பர் இல்லை என்று இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.கமலை வைத்து அவ்வை சண்முகி, தெனாலி, மற்றும் தசாவதராம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார் கே.எஸ். ரவிக்குமார்.


இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கமல் தனது நண்பர் இல்லை என்று சொல்லிவிட்டார்.

ரஜினிக்கு அரசியல் நிர்பந்தம் வந்த மாதிரி, கமலுக்கும் வந்துவிட்டதே... என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "ரஜினி அரசியலுக்கு வர்றது ஆண்டவன் கையில் இருக்கு. கமல் சார் மனசுல என்ன இருக்குனு நமக்குத் தெரியாதே? தவிர, கமல் சார் எனக்கு நெருங்கிய நண்பர் இல்லை.

‘மன்மதன் அம்பு'க்குப் பின்பு அதிகபட்சம் நாலஞ்சு தடவை சந்திச்சிருப்போம். ஆனால் ரஜினி சார்கூட ரெண்டு, மூணு நாளைக்கு ஒரு முறை பேசிடுவேன். யாரா இருந்தாலும் நிர்பந்தம்னு ஒண்ணு இருந்தாதான் அரசியலுக்கு வர முடியும்.

சினிமாவைப் பொறுத்தவரைக்கும் அவர் மாஸ்... இவர் கிளாஸ். அரசியல் எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியலை." என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top