புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் வசித்து வந்த கிறிஸ்டியானா எட்கின்ஸ் ஹாலிசவேன் என்ற இடத்தில் உள்ள லீசொஸ் உயர்நிலைப்பள்ளியில் படித்துவந்தார்.


16 வயதுடைய இவர் நேற்று பள்ளி செல்வதற்காக ஹாக்லி ரோடு சந்திப்பில் ஒரு பஸ்சில் ஏறியுள்ளார். பஸ் சென்றுகொண்டிருந்தபோது பஸ்ஸில் இருந்த மர்ம நபர் ஒருவர் கிறிஸ்டியானாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

பேருந்து ஓட்டுனர் எச்சரிக்கை ஒலி எழுப்பியும் அந்த மர்ம நபரை பிடிக்கமுடியவில்லை. கத்திக்குத்து பட்ட கிறிஸ்டியானா சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். சந்தேகத்தின் பேரின் பொலிசார் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

துரதிஷ்டவசமாக அந்த பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்த எவரும் கொலையாளியைப் பற்றிய அடையாளம் கூற முன்வரவில்லை. கிறிஸ்டியானாவை யாரும் இதுவரை தொந்தரவு செய்ததற்கான ஆதாரமும் கிட்டவில்லை என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும் மக்களின் பாதுகாப்பிற்காக அப்பகுதி பள்ளிகளிலும், பேருந்துகளிலும் பொலிசார் நேற்று முழுக்க ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

கிறிஸ்டியானாவைப்பற்றி அவரது பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், கிறிஸ்டியானா ஒரு நன்றாக படிக்கக்கூடிய திறமையான மாணவி என்றும் ஆசிரியர்களாலும், சக மாணவிகளாலும் விரும்பப்பட்டவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மாணவி ஒருவாரம் முன்னர், ஒரு மர்ம நபர் தனது பேருந்தின் படிக்கட்டு, இருக்கை என்று மாறி பல இடங்களில் இருந்ததைக் கண்டு பயந்து தனது டுவிட்டரில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top