புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மாரடைப்பால் துடித்த அம்புலன்ஸ் சார­தியை அந்த வாகனத்தில் பயணித்த புற்று நோயாளி காப்பாற்றியுள்ள சம்­பவம் பிரான்­ஸில் இடம்­பெற்றுள்­ள­து.



பிரான்ஸ் வடக்கு பகுதியிலுள்ள பெர்க் சர் மெர் பகுதியைச் சேர்ந்த புற்றுநோயாளி கிறிஸ்டியன் நயத் (60). புற்றுநோய் முற்றி விட்டதால் கடந்தவாரம், லென்ஸ் என்ற பகுதியிலுள்ள வைத்­தி­ய­சா­லைக்கு அம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

திடீரென அம்புலன்ஸை சார­தி மார்பு வலியால் துடித்தார். இதைக் கண்ட புற்று நோயாளியான நயத், வண்டியை ஓரம் நிறுத்தச் சொல்லி, சார­தி­யிடமிருந்து வாகனத்தின் சாவியை பெற்று, அம்புலன்ஸ்சை செலுத்தி லில்லி என்ற பகுதியிலுள்ள வைத்தி­ய­­சா­லையின் அவசர பிரிவில் சேர்த்துள்ளார்.

அம்புலன்ஸ் சா­­ர­திக்­கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. புற்றுநோயாளியான நயத் அம்புலன்ஸை செலுத்­தி வந்திருக்கா விட்டால் சார­தி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என வைத்­தி­­யர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top