புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பு:செங்கலடி இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நால்வரையும் மே மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர்

சுற்றுலா நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார். இந்த இரட்டைக் கொலை தொடர்பில் கைதானவர்களில் கொலையுண்ட தம்பதியினரின் 16 வயதான மகளான தலக்ஷனா உட்பட நான்கு பாடசாலை மாணவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்களான மாணவர்களை விளக்கமறியலில் பிரத்தியேகமாக வைக்குமாறும் அவர்களுக்கு சிறைச்சாலை உணவுகளையே வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கு வீடுகளில் சமைக்கும் உணவை அவர்களின் பெற்றோர் கொண்டுவந்து கொடுப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதனையடுத்து இவர்கள் கடுமையான குற்றத்தை புரிந்தவர்களாக கருதப்படுகிறார்கள்;. எனவே விளக்கமறியல் கைதிகளைப் போலவே இவர்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் பிரத்தியேக சலுகைகள் வழங்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

48 வயதான சிவகுரு ரகுவும், 41 வயதான அவரது மனைவி விப்ராவும் கடந்த 8ஆம் திகதி அவரது மகளின் கொலை திட்டமிடலுடன் அவரின் காதலனாலும் அவனது நண்பகர்கள் இருவராலும் கொல்லப்பட்டிருந்தனர். கொல்லப்பட்ட ரகுவின் கண்கள் இரண்டும் தோண்டப்பட்டிருந்ததாக மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் தந்தையின் கண்களை தோண்டுமாறு காதலனிடம் தலக்ஷனா என்ற மாணவியே கோரியிருந்தார் என்றும் அதன் படிதான் தான் அவரின் கண்களை தோண்டியதாக அந்த மாணவின் காதலன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்.

கொல்லப்பட்ட விப்ரா என்ற பெண்ணின் தந்தை செங்கலடியில் குறிப்பிடத்தக்க பணக்காரராக திகழும் சுந்தரமூர்த்தியாகும். பாடசாலை அதிபராக இருந்து ஓய்வு பெற்ற இவர் இக்கொலை நடந்த போது நேரில் பார்த்த சாட்சிகளில் ஒருவர். இக்கொலையை தனது பேத்தியே திட்டமிட்ட மிட்டு செய்ததாக ஆரம்பத்திலேயே அறிந்திருந்த போதிலும் தமது குடும்ப கௌரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டு விடும் என அதனை வெளியில் யாருக்கும் சொல்லாமல் முடிமறைத்திருந்தார் என தற்போது தெரியவந்துள்ளது
செங்கலடி இரட்டை படுகொலை சந்தேக நபர்களான நான்கு மாணவர்களையும் மேலும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல வர்த்தகரான சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி விப்ரா ரகு ஆகியோர் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி வீட்டில் சடலமாக மீட்கப்படடனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது மகளின் காதல் விவகாரமே இதற்கு காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து கொல்லப்பட்டவர்களின் மகள் மற்றும் அவளின் காதலன் உட்பட நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்கள் இன்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் ரீ.கருணாகரன் முன்னிலையில் மீண்டும் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை எதிர்வரும் மே 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் 15-16 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரட்டைப் படுகொலை விசாரணைகளை அவதானிப்பதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் பெற்றோரை கொலை செய்த மகள் விளக்கமறியலில்-புகைப்படங்கள்

மட்டக்களப்பு தாயையும், தந்தையும் வெட்டிக் கொலை செய்வதற்கு ‘டோர்ச் லைட்’ பிடித்த மகள்

மட்டக்களப்பில் காதலுக்காக அரங்கேறிய இரட்டைக்கொலை குறித்த உண்மைகள்
மட்டக்களப்பில் காதலுக்காக பெற்றோரை கொலை செய்த மகள்-புகைப்படங்கள்


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top