புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நபர் ஒருவர் தனது மகனின் மருத்துவ செலவுகளுக்காக தன்னை நிர்வாண கோலத்தில் ஓவியமாக வரைவதற்கு உடன்பட்ட சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.


சீனாவைச் சேர்ந்த பண்ணையாளரான சோஹோ சங்யொங் என்ற 47 வயது நபரே இவ்வாறு தனது மகனின் மருத்துவ செலவுகளுக்காக ஆடைகளைந்துள்ளார்.

மேற்படி நபரின் 22 வயது மகன் எலும்பு மச்சை நோய் காரணமாக சீனாவின் ஹெனான் மாகாணத்திலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

மேற்படி மகனின் மருத்துவ செலவுகளுக்கு 2,875,470 இலங்கை ரூபாய்கள் தேவைப்படுகின்றன.

ஏற்கனவே இவர் தன்னுடைய குடும்பத்திற்கு வருவாயை ஈட்டிதந்த விலங்கு பண்ணையை விற்பனை செய்து தனது மகனின் மருத்துவ செலவுகளை ஓரளவு பூர்த்தி செய்துள்ளார். எனினும் அத்தொகையானது போதாத காரணத்தினால் இவ்வாறு நிர்வாணகோலத்தில் நிற்கும் முடிவுக்கு அவர் வந்துள்ளார்.

இவர், ஹெனான் மாகாணத்திலுள்ள ஓவிய பாடசாலைக்கு சென்று அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் முன்னிலையில் நிர்வாணகோலத்தில் நிற்கிறார்.

இதன்போது மாணவர்கள் அவரை பலகோணங்களில் ஓவியமாக வரைகின்றனர். கிட்டத்தட்ட அவர் ஒரு மொடலாக தற்போது வளம்வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மொடலாக நிற்கும் ஒரு மணித்தியாலத்திற்கு அவர், அண்ணளவாக 2000 இலங்கை ரூபாய்களை பணமாக பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

'ஆடைகள் கலையப்படும் முதல் தருணம் வெட்கத்தை உணர்ந்தேன். ஆனால், அந்த தருணத்தில் எனது மகனின் நிலைமையை உணர்ந்தபோது வெட்கம் ஒரு பொருட்டாக தோன்றவில்லை.

இங்கு உள்ள மாணவர்கள் மிகவும் நல்லவர்கள். என்னை பார்த்து ஏளனம் செய்வதில்லை. அவர்கள் என்னை வைத்தியர்களுக்கும் மேலாக பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த துறையினூடான நான் அதிகமான பணத்தை சம்பாதிக்க முடியும்" என சோஹோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நபரின் மகனை குணபடுத்த முடியும் என வைத்தியர்கள் நம்பிக்கைவெளியிட்டுள்ளனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top