புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருகோணமலை-புல்மோட்டை இரட்டைக் கொலை விசாரணை சந்தேகநபர் ஆணா? பெண்ணா? மருத்துவ அறிக்கைக்கு உத்தரவு
புல்மோட்டை இரட்டைக் கொலைச் சம்பவத்தின் சந்தேக நபரான ரூபிகா தமயந்தி ஆணா – பெண்ணா
என்பதை ஆராய்ந்து மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் எஸ். சதீஸ்தரன் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

புல்மோட்டை மஹசன்புர இரட்டைக் கொலை வழக்கு விசாரணை மீண்டும் நேற்று புதன்கிழமை குச்சவெளி சுற்றுலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. புல்மோட்டை பொலிஸாரினால் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து நீதவான் எஸ். சதீஸ்தரன் குற்றவாளிகளான ரூபிகா தமயந்தி மற்றும் இமாலி பிரியதர்சினி ஆகிய இருவரையும் எதிர்வரும் மே 08 திகதி புதன்கிழமை வரைக்கும் 14 நாள் விளக்க மறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

விசாரணையின் போது குற்றவாளியான ரூபிகா தமயந்தி என்பவர் ஆணா? பெண்ணா? என்பதினை அறிந்து கொள்வதற்காகவே திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர்களிடம் மருத்துவ பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டுமென சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

ரூபிகா தமயந்தி மஹசன்புர பகுதியில் கடந்த காலங்களில் மரம் ஏறுவதினைத் தொழிலாகக் கொண்டு வந்தார். இதனால் கிடைக்கும் வருமானத்தினைக் கொண்டு இவர் கஞ்சா, குடு, சிகரட், மது ஆகிய போதைப் பொருட்களுக்கு அடிமையானவர். இதனால் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இவரை ஆண் என கருதுவதும் உண்டு. இவருடைய செயல்கள் எல்லாம் ஆண்களின் செயல்கள் போல காணப்பட்டது என பிரதேச மக்கள் தெரிவித்தார்.

எதிர்வரும் விசாரணைகள் மேற்கொள்வதற்கு முன்னர் வைத்திய அறிக்கையினை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.


திருகோணமலை இரட்டை கொலைக்கு காரணமான ஓரின உறவு



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top