புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


விஞ்ஞான உலகம் எப்போதுமே விசித்திரமானது. சமீபத்திய ஆச்சரியம் என்னவென்றால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை
முற்றிலுமாக குணமானது தான். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த முதல் நோயாளியாக இந்த குழந்தை, வரலாற்றில் இடம் பிடித்து விட்டது. அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள மிஸிஸிபி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 2010ம் ஆண்டு யூலை மாதம் இந்த குழந்தை பிறந்தது. குழந்தையின் பெயர் டிமோதி பிரவுன். குழந்தை பிறந்த நேரத்தில் அதற்கு எச்.ஐ.வி. நோய் இருந்தது. இந்த நோய் அந்த குழந்தைக்கு அதன் தாயிடம் இருந்து வந்தது.

 
இந்த குழந்தையின் தாய் கருவுற்றிருந்த போது எச்.ஐ.வி. சோதனை செய்து கொள்ளவில்லை. செய்திருந்தால் நோய் குழந்தைக்கும் பரவாமல் தடுத்து இருக்கலாம்.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தவுடன் குழந்தையை பரிசோதித்த உள்ளூர் மருத்துவர்கள் மிஸிஸிபி பல்கலைக்கழகத்தின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே புகழ் பெற்ற குழந்தை மருத்துவர் ஹென்னா கே குழந்தைக்கு சிகிச்சை அளித்தார்.

ஏ இசட் டி எனப்படும் ஜிடோவுடீன், லாமிவுடீன், நெலிராபின் ஆகிய மருந்துகளை குழந்தை பிறந்த 30 மணி நேரத்துக்குள் கொடுத்தார். 48 மணி நேரத்துக்குள் இரண்டு ரத்த பரிசோதனைகள் நடந்தன. குழந்தைக்கு நோய் எதிர்ப்புக்கான சிகிச்சையும் வழங்கப்பட்டது. 10 மாதத்தில் குழந்தையின் வைரஸ் பாதிப்பில் நல்ல மாற்றம் தெரிந்தது. 18 மாதங்கள் வரை குழந்தைக்கு சீரான மருத்துவ சிகிச்சைகளை தீவிரமாக கொடுத்து வந்தனர்.

சமீபத்தில் குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, எச்.ஐ.வி. நோய் முற்றிலும் குணமானது தெரியவந்தது. மருத்துவர் கேவுக்கு இது இன்பமான அதிர்ச்சி. குணமானதை உறுதி செய்து கொள்ள மேலும் மிக உயர்ந்த ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது தான் குழந்தை எச்.ஐ.வி.யில் இருந்து முழுவதுமாக மீண்டு விட்டது தெரியவந்தது. இது ஒரு மருத்துவ அதிசயமே.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top