புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உத்திரபிரதேசம் மாநிலமான ஆக்ராவில் பேஸ்புக் மூலம் விபச்சாரம் நடத்திய 11 பேர் கொண்ட கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர். இச்செய்தியானது அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமான ஆக்ராவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் விபசாரம் நடப்பதாக அங்கு வசிக்கும் மக்கள் பொலிசில் தகவல் தெரிவித்தனர்.

இத்தகவலின் அடிப்படையில் ஆக்ராவின் நஸ்பி பவன்குமார் தலைமையில் பல்கேஸ்வரியில் உள்ள கோவிந்த்புரி தெருவில் உள்ள இரு வீடுகளில் பொலிசார் சோதனை நடத்தினர். அதில் அவ்வீட்டினுள் பீர் பாட்டில்கள், ஆனுறைகள் மற்றும் சாராய பாட்டில்கள் போன்றவைகள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து அப்பகுதியில் விபச்சாரம் நடப்பது உறுதியானது.

இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் விபச்சார புரோக்கர்கள் வாடிக்கையாளர்களை பிடிப்பதற்கு போலியான அடையாளங்களுடன் கூடிய பேஸ்புக் அக்கவுண்ட்களை உருவாக்கி பயன்படுத்தியுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்தக் கும்பலோடு தொடர்புடையவர்கள் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top