புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தந்தை இறந்துவிட்டார் என நினைத்து மகன்கள் இறுதிச்சடங்கு செய்து
கொண்டிருந்த போது, அவர் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் சூளகிரி அடுத்த மாரண்டப்பள்ளியைச்
சேர்ந்தவர் ராஜி(வயது 65).

இவருக்கு ஐந்து மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் வசிக்கின்றனர்.

குடிப்பழக்கம் உள்ள ராஜி, மனைவி, மகன்களுடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு வெளியூர் சென்று விடுவது வழக்கம்.

இதே போன்று மே 21ம் திகதி சண்டை போட்டு விட்டு ராஜி, கிருஷ்ணகிரியில் உள்ள தாலப்பள்ளிக்கு சென்று விட்டார்.

இவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வராத நிலையில், ராஜியின் மூத்த மகன் கணேசன் தந்தை இறந்து விட்டது போல் கனவு கண்டுள்ளார்.

உடனே தாலப்பள்ளி புறப்பட்டு சென்று அங்குள்ள உறவினர்களிடம் விசாரித்துள்ளார். அங்கு அவர் இல்லை.

இதற்கிடையே ஒரு வாரத்துக்கு முன் தாலப்பள்ளி அருகே 65 வயதுடைய முதியவர் ஒருவர், இறந்து கிடந்ததாக கிடைத்த தகவலையடுத்து கணேசன் கிருஷ்ணகிரி தாலுகா பொலிசில் போட்டோவை காட்டி விவரம் கேட்டுள்ளார்.

பொலிசார் இறந்தது ராஜி தான் என உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து தந்தை இறந்து விட்டதாக குடும்பத்தினர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையே இறந்த தந்தை ராஜிக்கு, நேற்று இறுதிச்சடங்கு செய்வதாக உறவினர்களுக்கு தெரிவித்து ஊருக்கு வரவழைத்துள்ளனர்.

நேற்று பகலில் ராஜி படத்துக்கு மாலை போட்டு காரியம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ராஜி திரும்பி வந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் காரிய நிகழ்ச்சிகளை நிறுத்தி விட்டு, அவரை கட்டிபிடித்து அழுதனர்.

இறந்தாக நினைத்தவர் உயிருடன் திரும்பி வந்த சம்பவத்தால் சூளகிரியில் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top